- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லன், வில்லியாக நடிக்கப் போவது இவர்கள்தான் - பட பூஜையில்...

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லன், வில்லியாக நடிக்கப் போவது இவர்கள்தான் – பட பூஜையில் மேடையில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் மோசடி சாமியாரை எதிர்க்கும் அம்மனாக அவரது நடிப்பு பெரிய அளவில் வரவேற்பு பெற்று, படமும் மாபெரும் வெற்றியடைந்தது.

தொடர்ந்து இப்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார். நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா நடந்தது.

மூக்குத்தி அம்மன் 2 படம் துவக்க விழாவில் இயக்குனர் சுந்தர் சி பேசியதாவது, இந்த படம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் கனவு. ஒரு இயக்குனராக எழுத்தாளராக நாங்கள் கனவு காண்கிறோம். பிரமாண்டமாக நினைக்கிறோம். அதை நிறைவேற்றி காட்ட பின்னால் ஒரு சக்தி தேவை. அந்த சக்தியாக தான் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த படத்தை சிம்பிளாக தான் ஆரம்பித்தோம். ஆனால் ஸ்கிரிப்ட் எழுத எழுத இது பெரிய பட்ஜெட் படமாக மாறிவிட்டது. எனது கேரியரில் எனக்கே இது பெரிய படமாகி விட்டது. இந்தியாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கற்பனை செய்வது ஈஸி. ஆனால் பட்ஜெட் என்று வரும்போது நாங்களே கொஞ்சம் யோசித்தோம்.

ஆனால் தயாரிப்பாளர் எங்களை விட டபுள் மடங்கு உற்சாகத்தில் இந்த பட பூஜை விழாவையே மிக பிரமாண்டமாக சிறப்பாக நடத்துகிறார். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனுக்கு சமமான ஒரு முக்கியமான கேரக்டரில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார். முக்கியமான மற்றொரு கேரக்டரில் கன்னட நடிகர் துனியா விஜயன் நடிக்கிறார்.

இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பாரா என்ற யோசனையில்தான் ரெஜினாவிடம் பேசினேன். வித்யாசமான கேரக்டர் என்றவுடன் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். கன்னடத்தில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குனராகவும் உள்ள துனியா விஜயன், இந்த படத்தில் நெகடிவ் ரோலில் நடிக்கிறார். அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இந்த படத்தில் எனக்கு நிறைவேறி இருக்கிறது என, இயக்குனர் சுந்தர் சி விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்