- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் நாளில் வசூலில் முந்திய தாய்கிழவி… ராதிகாவுடன் மோதிய கணவர் சரத்குமார் நடிகர் ஆரி அர்ஜூனன்...

முதல் நாளில் வசூலில் முந்திய தாய்கிழவி… ராதிகாவுடன் மோதிய கணவர் சரத்குமார் நடிகர் ஆரி அர்ஜூனன் நிலமை இப்படி ஆகிடுச்சே?

- Advertisement -

எப்போதுமே ஒரு நல்ல திரைப்படம் தனக்கான வெற்றியை தேடிக் கொள்ளும் என்பார்கள். அந்த வரிசையில் காக்கா முட்டை குட்நைட் குடும்பஸ்தன் பார்க்கிங் லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் சிறை டிடிடி போன்ற படங்கள் நல்ல கதைக்களத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான படம் தாய்கிழவியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பவுனுத்தாயி என்ற தண்டட்டி அணிந்த மூதாட்டி கேரக்டரில் ராதிகா சரத்குமார் மிகவும் அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் அவர் படத்தில் வருகிற நேரம் மிகவும் குறைவுதான் என்பது ஒரு ஏமாற்றம்தான்.

- Advertisement -

தாய்கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். தாய்கிழவி படத்தில் அருள்தாஸ் முனீஸ்காந்த் ஜார்ஜ் மரியம் பால சரவணன் சிங்கம்புலி முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். அந்த கேரக்டர்களில் அவர்களது பக்குவப்பட்ட அனுபவம் மிக்க நடிப்பு பெரிய அளவில் படத்துக்கு வலிமை சேர்த்துள்ளது.

தாய்கிழவி படம் வெளியாவதற்கு முன்பே பிரிவ்யூ காட்சியில் செலிபரட்டிகள் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தாய்கிழவி நேற்று 360 தியேட்டர்களில் வெளியானது.

- Advertisement -

முதல் நாளில் இந்த படம் மொத்தம் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடி ரூபாய் என்ற நிலையில் முதல் நாளிலேயே 2.5 கோடி ரூபாய் வசூலித்திருப்பது படக்குழுவினரை குஷிப்படுத்தி உள்ளது. ஆனால் நேற்று வெளியான மற்ற 2 படங்கள் வசூலில் மொக்கை வாங்கியுள்ளது.

அதுவும் ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் நடித்த ஆழி படமும், நெடுஞ்சாலை பட நடிகர் ஆரி அர்ஜூனன் நடித்த போர்த் ப்ளோர் படமும் வெளியானது. இதில் முதல் நாள் வசூலில் தாய்கிழவி மொத்தம் ரூ. 2.5 கோடி வசூலித்த நிலையில் நடிகர் சரத்குமார் நடித்த ஆழி படம் ரூ. 4 லட்சம் ஆரி நடித்த போர்த் ப்ளோர் படம் ரூ. 4 லட்சம் என வசூலித்துள்ளது. தாய்கிழவியுடன் மோதிய நடிகர்கள் சரத்குமார் ஆரி நடித்த படங்கள் வசூலில் தோல்வியை சந்தித்துள்ளன.

- Advertisement -

சற்று முன்