நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருக்கிறார். முதலில் தயாரிப்பாளராக இருந்த சரத்குமாரை, வில்லன் நடிகராக புலன்விசாரணையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்கே செல்வமணி தான். ஆனால் அந்த மும்பை டாக்டர் வில்லன் கேரக்டரில் சரத்குமார் நடித்தால் சரியாக இருக்கும் என ஆர்கே செல்வமணிக்கு சிபாரிசு செய்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.
சரத்குமாரை பொருத்த வரை தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்கத் துவங்கி, பின்பு கதாநாயகனாக மாறி, பல வெற்றிப்படங்களை தந்த வெற்றியாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்களில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அவரை வேற லெவலில் கொண்டு போய் விட்டார் என்பதை மறுக்கவே முடியாது.
நடிகர் சரத்குமார் நடிக்க வருவதற்கு முன்பே காதல் திருமணம் செய்தவர். அவரது மனைவி சாயாதேவி. அவருக்கு இரண்டு மகள்கள். அவர்களில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். இப்போது சாயாதேவி, டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இனி அவரும் பல படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது.
சரத்குமாரின் 2வது மனைவி ராதிகா, ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர். சரத்குமார், ராதிகா, சாயாதேவி வரலட்சுமி என நான்கு பேருமே சினிமாவில் நடிக்கிற சூழலில் சரத்குமார் – ராதிகா மகன், ராகுல் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவருக்கு சினிமாவில் விருப்பமில்லை. கால்பந்தாட்டத்தில்தான் விருப்பம் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறிவிட்டார் சரத்குமார்.
இந்நிலையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வரும் நடிகர் சரத்குமார், சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வரும்போது மட்டுமே அந்த கட்சி கொடி அச்சிட்ட வேட்டியை கட்டிக்கொண்டு கட்சி நிர்வாகிகளை பார்க்க கிளம்புவார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்துவார். தேர்தல் முடிந்த பிறகு வழக்கம்போல ஷூட்டிங் செல்ல கிளம்பிவிடுவார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.மற்றபடி அவரது அரசியல் பயணம் என்பது பெரிய அளவில் மக்களிடம் கவனத்தை, வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து இணைவதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுல இணைச்சீங்களா, உங்க குடும்பத்துல இருக்கிற 2 பேரை இணைச்சீங்களான்னு தெளிவா சொல்லுங்க, நீங்களும் உங்க மனைவியும் 2 பேர் மட்டுமே பாஜகவோட வாட்சப் குரூப்ல இணைஞ்சுட்டோம்முன்னு சொல்லுங்க என்றும் ரசிகர்களும், நெட்டிசன்களும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.





