- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இது எல்லாம் நம்ம முதல்வர் விஜய் நடித்திருக்க வேண்டிய திரைப்பபடங்களா? - அடடா என...

அட இது எல்லாம் நம்ம முதல்வர் விஜய் நடித்திருக்க வேண்டிய திரைப்பபடங்களா? – அடடா என பெருமூச்சு விடும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நீடித்தவர் நடிகர் விஜய். அவரது கேரியரில் நடிகர் விஜய் மொத்தம் 69 படங்களில் நடித்துள்ளார். அதில் 68 படங்கள் திரைக்கு வந்துள்ளன. அவரது 68வது படம் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். 2025ம் ஆண்டில் வெளியான தி கோட் என்ற இந்த படம் 445 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

அதன்பிறகு நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். இந்த படம்தான் தனது கடைசி படம் என்றே அறிவித்துதான் நடிகர் விஜய் அதில் நடித்தார். பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் படம் இதுதான். ஆனால் விஜய்க்கு இது கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்திருந்தார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய 3 ஹிட் படங்களை இயக்கியவர் எச் வினோத். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 போன்ற படங்களின் இயக்குனரும் இவர்தான். எச் வினோத் விஜய் கூட்டணியில் உருவான ஜனநாயகன் படம் 5 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கிப் போயுள்ளது. இந்த படம் திரைக்கு வர வாய்ப்பில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் நடித்த பல மாஸ் ஹிட் படங்கள் முதலில் மற்ற ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய படங்களாக இருந்திருக்கும். அவர்கள் கால்ஷீட் இல்லாதது அல்லது கதை பிடிக்காதது அல்லது ஹீரோவுக்கு பதிலாக மேனேஜர் கதை கேட்டது என பல காரணங்கள் இதற்கு இருக்கலாம். அந்த வகையில் இன்றைய தமிழக முதல்வர் விஜய் பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்திருக்கிறார்.

- Advertisement -

அந்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய நடிகர் அர்ஜூன் நடித்த முதல்வன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி படங்களில் முதலில் நடிக்க கதை கேட்டது நடிகர் விஜய்தான்.

அதே போல் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் மாதவன் நடித்த ரன், நடிகர் தனுஷ் நடித்த அனேகன் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த உன்னை நினைத்து இயக்குனர் சேரன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த ஆட்டோகிராப் போன்ற படங்களில் முதலில் நடிக்க கதை கேட்டவர் விஜய்தான். அவர் மறுத்த பிறகுதான் மற்ற ஹீரோக்கள் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்