- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளுக்கு பின் வரும் முதல்வன் 2 ஆனா… ஹீரோ ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இல்லே...

பல ஆண்டுகளுக்கு பின் வரும் முதல்வன் 2 ஆனா… ஹீரோ ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இல்லே – தனது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் கொடுத்த டைரக்டர் ஷங்கர்

- Advertisement -

இயக்குனர் ஷங்கர், அர்ஜூன் நடித்த ஜெண்டில் மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து காதலன், முதல்வன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், அன்னியன், ஐ, நண்பன், சிவாஜி, எந்திரன் போன்ற படங்களை கொடுத்தார். ஷங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டம்தான். ஆனால் அந்தளவுக்கு அழுத்தமான கதையிலும் அவர் கவனம் செலுத்துவார்.

ஷங்கர் படங்கள் என்றாலே, அதில் சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துகள் நிச்சயமாக இருக்கும். இந்தியன் படத்தில் லஞ்சம் ஊழலை சொல்லி இருப்பார். சிவாஜி படத்தில் கருப்பு பணம் குறித்து பேசி இருப்பார். முதல்வன் படத்தில் அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்திருப்பார். அன்னியன் படத்தில் கார்பரேட் நிறுவனங்கள் பற்றி பேசியிருப்பார். நண்பன் படத்தில் கல்லூரி வாழ்க்கையை காட்டியிருப்பார்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தியன் படத்தை இப்போது இந்தியன் 2, இந்தியன் 3 படங்களாக தர இருக்கிறார் ஷங்கா். இதில் இந்தியன் 2 இயக்கும்போதே, அதில் இருந்து இந்தியன் 3 உருவாகி இருக்கிறது. அத்துடன் ராம் சரண் நடிப்பில் கியாரே அத்வானி ஜோடியாக நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தியன் 2, 3 படங்களிலும், அதே போல் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்ஜே சூர்யா முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜூன் புகழேந்தி என்ற கேரக்டரில் நடித்த படம் முதல்வன். இதில் அரங்கநாயகம் என்ற கேரக்டரில் தமிழக முதல்வராக ரகுவரன் நடித்திருப்பார். டிவி சேனல் ரிப்போர்ட்டர் அர்ஜூன், ரகுவரனை நேர்காணல் செய்யும் போது எசகுபிசகான சில விஷயங்களை கேட்டு ரகுவரனை திக்குமுக்காட வைப்பார். அப்போது ரகுவரன், ஒரு நாள் முதல்வராக நீ இருந்து பார்த்தால், என் கஷ்டங்கள் தெரியும் என சவால் விடுவார். அதற்கு அர்ஜூன் சம்மதிக்க இந்த படம் வேற லெவலில் பின்னர் மாறிவிடும்.

- Advertisement -

இந்த படத்தை தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் நாயக் என்ற பெயரில் இயக்கினார் டைரக்டர் ஷங்கர். அந்த படம் பாலிவுட்டிலும் அமோக வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இதையடுத்து தற்போது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை நாயக் 2 என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார் ஷங்கர். இந்த 2ம் பாகத்திலும் நடிகர் அனில் கபூர் கதாநாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான சந்திப்பு சமீபத்தில் நடந்திருக்கிறது.

இந்நிலையில் முதல்வன் படம் அர்ஜூன் கதாநாயகனாக தமிழில் நடித்த நிலையில் முதலில் தமிழகத்தில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகே இந்தியில் அந்த படத்தை ஷங்கர் இயக்கினார். அப்படி என்றால் தமிழில் முதல்வன் படத்தின் 2ம் பாகத்தை எடுத்துவிட்டு, அதன்பிறகுதானே இந்தியில் அதை 2ம் பாகமாக எடுக்க வேண்டும். அப்படி என்றால், தமிழ் ரசிகர்களை விட, தமிழ் நடிகர்களை விட இந்தி நடிகர்களும், இந்தி ரசிகர்களும்தான் ஷங்கருக்கு முக்கியமானவர்களாகி விட்டார்களாக, என விமர்சனம் எழுந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்