- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மீதுள்ள கோபம்.. சீரியலில் காண்பித்து மனம் ஆற்றிக்கொண்டாரா எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மீதுள்ள கோபம்.. சீரியலில் காண்பித்து மனம் ஆற்றிக்கொண்டாரா எஸ்.ஏ.சந்திரசேகர்

- Advertisement -

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்துக்காக அவருக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 175 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கோலிவுட்டில் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் வெங்கட் பிரபு ஈடுபட்டு இருக்கிறார்.

படத்தின் பூஜை விரைவில் போடப்பட்டு லியோ படம் ரிலீசுக்கு பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது கமர்ஷியல் கிங்காக வலம் வந்தாலும் அவரது ஆரம்பகட்டத்தில் அவருக்கு துணையாக இருந்தவர் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். விஜய்க்கான கதையை கேட்பது, இந்த கதையில் நீ நடி என்று அறிவுறுத்துவது என பல விஷயங்களை விஜய்க்காக அவர் செய்தார்.

- Advertisement -

சுமூகமாக போய்க் கொண்டிருந்த தந்தை மகன் உறவு கடந்த சில வருடங்களாக மனஸ்தாபத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் விஜய்யின் மக்கள் இயக்கத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதாகவும் ஆனால் விஜய்யோ அதை விரும்பாததால் தன்னுடைய ஆதரவாளரான புஸ்ஸி ஆனந்தை அதில் முக்கிய பொறுப்பில் அமர வைத்ததும்தான் என்று திரையுலகில் முணுமுணுப்பு இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

முக்கியமாக எஸ்ஏ சந்திரசேகருடன் விஜய் பேசுவதே இல்லை என்றும் தனது தாய் ஷோபாவுடன் மட்டும்தான் பேசுகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட தனது தாயின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய விஜய் அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஆனால் அந்த புகைப்படத்தில் எஸ்ஏ சந்திரசேகர் இல்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே இருக்கும் மனஸ்தாபம் பஇன்னமும் தீர்ந்தபாடில்லை என்று பலராலும் பேசப்பட்டது. ஆனால் எஸ் ஏ சந்திரசேகர் அப்போது சீரியல் ஷூட்டிங்கில் இருந்ததால் அவரால் விஜய் வந்தபோது இருக்க முடியவில்லை என்றும் ஒரு தகவல் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் எஸ்.ஏ. சந்திரசேகர் கிழக்கு வாசல் நாடகத்தில் நடித்து வருகிறார். அதில் அவர், “ ஒருவன் குடித்து விட்டால் என்ன பேசுகிறான் என்று அவனுக்கு தெரியாது. ஏனனில் அந்த போதை அவனுக்கு ஏறிவிடும். அது போல்தான் உனக்கும் திடீரென பணக்கார வாழ்க்கை ஒன்று வந்துவிட்டது. அந்த போதை ஏறிவிட்டதால் என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரியவில்லை” என்று ஒரு கதாபாத்திரத்தை பார்த்து பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலரும் இந்த வசனத்தை விஜய்க்காகத்தான் எஸ்ஏ சந்திரசேகர் பேசுகிறார் என்றும்; தனது மனதில் உள்ளதை இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி தனது கோபத்தை ஆற்றிக்கொண்டார் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்