- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடக்கடவுளே இத்தனை சூப்பர் ஹிட் படங்களையா வேண்டாம் என ஒதுக்கியிருக்கிறார் நடிகர் விஜய்... உண்மை தெரிஞ்சா...

அடக்கடவுளே இத்தனை சூப்பர் ஹிட் படங்களையா வேண்டாம் என ஒதுக்கியிருக்கிறார் நடிகர் விஜய்… உண்மை தெரிஞ்சா விஜய் ரசிகர்கள் வருத்தப்படுவாங்களேப்பா….

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தொய்வை அடைந்தாலும், வசூல் ரீதியாக பட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுப்பதே இல்லை. இளைஞர்களை தவிர குடும்ப ஆடியன்ஸ்களும் விஜய் பக்கம் இருப்பதாலேயே இந்த நிலையை அவர் அடைந்துள்ளார்.

தற்போது மோஸ்ட் வான்டட் ஹீரோவாக இருக்கும் விஜய், தனது அடுத்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருக்கிறார். அரசியலில் களம் காணும் அவர், இனி முழுக்க முழுக்க அதில் மட்டுமே ஆர்வம் செலுத்த இருப்பதாக கூறியிருக்கிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கு அடுத்த திரைப்படம் தான் அவர் யாருடன் வெளியே போகிறார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரியாமலேயே உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் திரையுலக வாழ்வில் தவறவிட்ட சில முக்கியமான திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இதில் முதலாவதாக நாம் பார்க்கப் போவது தீனா திரைப்படம். அஜித் ஹீரோவாக நடித்த மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் கதையை முதலில் ஏ ஆர் முருகதாஸ் விஜயிடம் தான் கூறியிருக்கிறாராம். ஆனால் படத்தில் நடிப்பதற்கு மறுத்து இருக்கிறார் தளபதி விஜய்.

சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்த சிங்கம் திரைப்படமும், முதலில் விஜய்க்கு தான் சென்றுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தை விஜய் மறுத்ததற்கு இப்போது வரை காரணம் ஏதும் தெரியவில்லை. இந்த வரிசையில் நாம் அடுத்ததாக பார்க்க போவது சண்டக்கோழி திரைப்படம். லிங்குசாமியிடம் முதல் பாதிக்கான கதையைக் கேட்டு வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.

ஆனால் படம் சூப்பர் ஹிட் ஆக, அதை இயக்குனரிடம் தனது வாழ்த்துக்களையும் விஜய் கூறியிருக்கிறார். இது மட்டுமல்ல தூள் திரைப்படமும் முதலில் விஜய்க்கு வந்தது தானாம். ஆனால் இந்தப் படத்தின் மூலம் பெரிய பலன் ஏதும் கிடைக்காது என்று கூறி வேண்டாம் என்றிருக்கிறார் விஜய். முதல்வன் திரைப்படமும் முதலில் விஜய்க்கு தான் சென்றுள்ளது. ஆனால் அரசியல் படம் வேண்டாம் என்று விலகி இருக்கிறார் தற்போது அரசியல் குதித்திருக்கும் விஜய்.

சற்று முன்