தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட இதை வெற்றி திரைப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து அசத்தினார்.
ஆனால் சமீப காலமாக அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும் அந்த அளவு பெரிய தாக்கத்தை கொடுக்கவில்லை. குறிப்பாக தர்பார் திரைப்படம் மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தது. அது மட்டும் அல்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது.
இதேபோல் தான் சர்கார், ஸ்பைடர் ஆகிய திரைப்படங்களும் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. இதன் காரணமாக இயக்கத்திற்கு ஒரு சிறிய இடைவெளி விட்டார் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து விஜய்க்காக அவர் ஒரு கதையை எழுதி வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட இதற்கான ப்ராஜெக்ட் தொடங்கி இருந்த நேரத்தில், படத்தின் கதை பிடிக்காததால் விஜய் அதிலிருந்து வெளியேறினார். இப்படியான சூழலில், சிவகார்த்திகேயன் இடம் கதை கூறி ஓகே வாங்கி விட்டார் ஏ ஆர் முருகதாஸ். விஜய் திரைப்படத்திற்காக எழுதிய கதையை தான் சிவகார்த்திகேயன் ஓகே செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கதாநாயகியாக ருக்மணி நடிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூட்டிங் தளத்தில் ஒரு போட்டோவை எடுத்து மனம் நெகிழ்ந்து உள்ளார் ஏ ஆர் முருகதாஸ். சென்னையில் உள்ள மயிலை பறக்கும் ரயில் நிலையத்தில் தற்போது சிவகார்த்திகேயன் உடனான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அந்தப் புகைப்படத்தை தான் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வருவதாக அவர் கூறியிருக்கிறார். சரியாக ரமணா திரைப்படத்தின் படப்பிடிப்பும் இந்த இடத்தில் தான் நடைபெற்றது. அதைக் குறிப்பிட்டு கூறியிருக்கும் முருகதாஸ் மிஸ் யூ கேப்டன் என்றும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.





