- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்பு எல்லைக்கு அப்பால் எப்போதும் உள்ள அனிருத், இளம் இசை நாயகனுக்கு குவியும் வாய்ப்புகள் -...

தொடர்பு எல்லைக்கு அப்பால் எப்போதும் உள்ள அனிருத், இளம் இசை நாயகனுக்கு குவியும் வாய்ப்புகள் – வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழிகளிலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. அவரது சம்பளம் ஒரு படத்துக்கு ரூ. 15 கோடி என்றும் சொல்லப்படுகிறது. தவிர அவரது இசைக் கச்சேரிகளுக்கு உலகளவில் பெரிய வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் இன்றைய முன்னணி நட்சத்திர இயக்குனர்கள் கூட அனிருத்தை தொடர்பு கொள்ள முடிவதில்லை. எப்போது அவரை போனில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்றுதான் பதில் வருகிறது. இதனால் அட்லி போன்ற பெரிய இயக்குனர்களே அட்லி தொடர்பு கொள்ள முடியாமல் விரக்தியடைகின்றனர்.

- Advertisement -

இரவு முழுவதும் காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு இசைப் பணி, பகல் முழுவதும் தூக்கம் என்பதுதான் இசையமைப்பாளர்களின் வழக்கமாக உள்ளது. அதனால் பகல் நேரங்களில் அனிருத் போன்றவர்களின் மொபைல் போன் செயல்பாட்டில் இல்லாமல் சைலண்ட் மோடுக்கு போய் விடுவதும் வழக்கம்தான்.

மேக்ஸிமம் கேரண்டி வெற்றியை கொடுத்தும் ஒரு நட்சத்திர இசையமைப்பாளராக அவர் இருந்தும் பல படங்களில் அவர் இசையமைக்க வாய்ப்பின்றி போக காரணம், இப்படி அவரை எந்த இயக்குனரும் தொடர்பு கொள்ள முடியாத சூழல்தான். அவரது மேலாளர் சித்தார்த் ராவ் என்பவரும் அவரது நண்பர்தான்.

- Advertisement -

இவர் சொர்க்கவாசல் படத்தின் புரடியூசர் என்றும் சொல்லப்படுகிறது. அனிருத்தின் நண்பர் என்பதால் அவரும் போனில் கிடைப்பதில்லை. பலர் தங்களது நெருங்கிய நண்பர்களை தான் தங்களது மேலாளர்களாக வைத்துள்ளனர். அதனால் சித்தார்த் ராவ் மூலமாகவும் பலர் அனிருத்தை தொடர்பு கொள்ள முடிவதில்லை.

இந்த சூழலில்தான் அனிருத்தை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்படும் இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் சாய் அபயங்கர் பக்கம் சென்று விடுவதாக ஒரு முக்கிய தகவல் கோலிவுட்டில் இருந்து கசிந்துள்ளது. ஆனால் அரசன் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலை கேட்ட பிறகும் அவரை கமிட் செய்ய பெரிய தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்