- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அந்த படத்துல அப்படி ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கவே கூடாது… - இயக்குனர் கே பாக்யராஜிடம்...

நீங்க அந்த படத்துல அப்படி ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கவே கூடாது… – இயக்குனர் கே பாக்யராஜிடம் நேரடியாக சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர் கே பாக்யராஜ், ஆரம்பத்தில் அவர் இயக்கிய படங்களில் அவரே கதாநாயகனாக நடித்தார். அதனால் தனக்கேற்ற வகையில் அவர் படத்தின் கதைக்களத்தை உருவாக்கி கொண்டார். அதே நேரத்தில் தனது இயல்பை வெளிப்படுத்தும் யதார்த்த காட்சிகளையும் படத்தில் வைத்தார். அதுதான் அவரது படங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

அவரது இயக்கத்தில் 1980 90களில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன. இயக்குனர் பாரதிராஜாவின் சீடர் என்ற அடையாளத்துடன் இயக்குனராக நடிகராக கே பாக்யராஜ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். மேலும் இன்று வரை இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெருமை கே பாக்யராஜூக்கு மட்டுமே உள்ளது.

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த படம் தான் விடியும் வரை காத்திரு. கடந்த 1981ம் ஆண்டில் இந்த படம் வௌியானது. கே பாக்யராஜூடன் சத்யகலா கராத்தே மணி கோகுல்நாத் சங்கிலி முருகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

கோடீஸ்வரர் ஒருவரின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நல்லவன் போல நடித்து அந்த கோடீஸ்வரரின் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் கே பாக்யராஜ், அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தன் ஆசை காதலியுடன் செல்ல நினைப்பதுதான் இந்த படத்தின் கதை. அதற்காக கே பாக்யராஜ் செய்யும் தில்லு முல்லுகள், அதை துப்பறியும் போலீஸ் அதிகாரி கராத்தே மணி என இந்த படம் பார்ப்பதற்கு சுவாரசியமாகவே இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஏ வெங்கடேஷ் இந்த படம் குறித்து கூறியதாவது, விடியும் வரை காத்திரு பாக்யராஜ் இயக்கி நடித்த படம். அந்த படத்தோட கதை சூப்பரா இருக்கும். ஒரு முறை பாக்யராஜ் சாரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சொன்னேன், இப்பக்கூட அந்த படத்தை ரீமேக் பண்ணலாம்.

ஆனால் அந்த படத்தில் நீங்கள் நடித்திருக்க கூடாதுன்னு சொன்னேன். ஏனென்றால் மனைவியை தாலி கட்டிய கணவனே கொல்ல முயற்சி பண்ணுகிற மாதிரியான கதை. பாக்யராஜூக்கு அந்த கேரக்டர் செட் ஆகலே என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார். கே பாக்யராஜ் நடித்து இயக்கிய படங்களில் அதிக கவனம் பெறாத பெண்களிடம் எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்த படமாக இது இருந்தது.

- Advertisement -

சற்று முன்