தவெக அரசு பொறுப்பேற்று தமிழகத்தில் 100 நாட்கள் ஆட்சியை கடந்துள்ளது. ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் தமிழ்நாட்டில் மாற்றம் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய பல வாக்குறுதிகள், இன்றும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன.
அதே நேரத்தில் சில வாக்குறுதிகளை தவெக அரசு சட்டசபையில் அறிவித்தாலும் அதிலும் தமிழக மக்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தல் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் தருவதாக கூறிவிட்டு இப்போது 3 மட்டுமே தரப்படும். அதுவும் 2.5 லட்சம் ரூபாய் குடும்ப ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டத்தில் கேஸ் சிலிண்டரை பயனாளிகள் உரிய தொகை கொடுத்து வாங்கிய பிறகு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் ஒரு புதிய முறையை அறிவித்துள்ளார். இது வரும் ஆனா வராது என்ற என்னத்தே கண்ணையாவின் வசனத்தை தான் ஞாபகப்படுத்துகிறது. இதற்கு பதிலாக பாதி விலையில் அனைத்து குடும்பங்களுக்கும் காஸ் சிலிண்டர் தரலாமே என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மகளிர் இலவச பஸ் பயணம், விவசாயிகள் பயிர்க்கடன் ரத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் குறிப்பாக மகளிர் உரிமத் தொகை 200 யூனிட் இலவச மின்சாரம் என தவெக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதி எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எல்லாவற்றிலும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதற்கிடையே மளிகை பொருட்களின் விலையும் உச்சத்தை தொட்டுவிட்டதால் மக்கள் கடும் எரிச்சலில் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது, பொழுதுபோக்குக்காக தயாரிக்கப்படுகிற திரைப்படங்களில் நடிக்கிற நடிகனுக்கு அடிமையாகி, அவன் படம் வெளியாகும் போது போஸ்டர் ஒட்டி கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து முடித்துவிட்டு குத்தாட்டம் போடுகிறவனை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அமைச்சராகவும் ஆக்கினால், திடீரென சமூக பொருளாதார அரசியல் அறிவு வந்துவிடுமா என்ன?
தலைவனுக்கே ஒரு மண்ணும் தெரியாத போது இந்த கூட்டத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? என்று பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கையப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கும் தவெக அரசின் திட்டமும் மக்களுக்கு பலத்த வெறுப்பை தந்துள்ளது.





