தமிழ் திரையிசை வரலாற்றில் தேவாவின் பங்கு தவிர்க்க முடியாதது. மெலோடி, வெஸ்டர்ன், கானா பாடல்கள் என வித வித ஜானர்களில் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தவர் அவர். அதனால் அவர் தேனிசை தென்றல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தனது அபாரமான இசையை கொடுத்திருக்கிறார்.
மேற்கூறியவர்களின் படங்களின் பாடல்களில் கண்டிப்பாக தேவா இசையமைத்த பாடல்கள் டாப் 5க்குள் இருக்கும். அந்த அளவு ஹிட்டுகளை கொடுத்தார். சினிமாவில் இசையமைப்பதை நிறுத்தியிருக்கும் அவர் கடைசியாக சிங்கப்பூர் தமிழர்கள் எடுக்கும் நாடகத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நெஞ்சமே நெஞ்சமே பாடலை பாடினார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசும்போது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். தேவா அந்தப் பேட்டியி பேசுகையில், “காதல் கோட்டை பட்த்தில் இடம்பெற்ற கவலைப்படாதே சகோதரா பாடலில் நடிக்க சிவசக்தி பாண்டியன் என்னைத்தான் கூப்பிட்டார். ஆனால் நான் அவரிடம் சார் எனக்கு அதெல்லாம் தெரியாது. பாடல் பாட சொன்னீர்கள் என்றால் அதை பார்த்துக்கொண்டே பாடிடுவேன். ஆனால் இதை எல்லாம் என்னால் செய்ய முடியாது என கூறி மறுத்துவிட்டேன்.
அதுமட்டுமின்றி நடனம் எல்லாம் ஆட சொன்னால் அதை பார்க்கவே நன்றாக இருக்காது. பல படங்களில் நடிப்பதற்கு இன்னும் என்னை கூப்பிடத்தான் செய்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜிகூட அவருடைய எல்கேஜி படத்தில் அவரிடன் அப்பா கேரக்டருக்கு என்னிடம்டஹன் கேட்டார். கதை எழுதும்போது உங்களை மனதில் வைத்துதான் எழுதினோம் என்றுகூட சொன்னார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
தம்பி தனுஷ்கூட சமீபத்தில் ஃபோன் செய்தார். ஒரு அருமையான கதையின் வில்லனாக நடிக்க என்னை கூப்பிட்டார். வடசென்னை பாஷை நான் நன்றாக பேசுவேன். எனவே வடசென்னையை மையமாக வைத்து உருவாகும்க் கதையில் நீங்கள் நடிக்க வேண்டும் என சொன்னார். நான் அதற்கு, என்னை அழைத்ததற்கு நன்றி ப்பா. ஆனா நான் பாடிய பாடல்களே எனக்கு மனப்பாடம் ஆகாது. என்னை அழைத்துபோய் டயலாக் பேச வைத்தால் அது மறந்துவிடுவேன். அப்படி நடந்தால் அங்கிருக்கும் பிரபலங்களுக்கு பிரச்னையாக இருக்கும் என சொன்னேன். அவரும் புரிந்துகொண்டார்.
அடிதடி, ஓடி விளையாடு படங்களில் சில காட்சிகளில் நடித்திருந்தேன். அதுவும் பாடல் சம்பந்தப்பட்டது என்பதால்தான் அதற்கும் ஒத்துக்கொண்டேன். தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்” என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.





