- Advertisement -
Homeபொழுதுபோக்குமுக்கிய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இயக்குனர் பாலா விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா - அப்போ...

முக்கிய நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு இயக்குனர் பாலா விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா – அப்போ அடுத்த படத்தில் பாலா, சூர்யா மீண்டும் இணைவார்களா?

- Advertisement -

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் பாலா. பிறகு விக்ரம் நடிப்பில் சேது படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே குருவின் சிஷ்யன் என்பதை பாலா நிரூபித்தார். விக்ரமுக்கும் இந்த படம் பெரிய திருப்புமுனையாக சினிமா பயணத்தை துவங்கி வைத்தது.

அதன்பிறகு நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை தந்தார் பாலா. ஒவ்வொரு படமும் தமிழ் சினிமா ரசிகர்களால் பலத்த வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன. ஆர்யா, சூர்யா, விஷால், அதர்வா ஆகியோருக்கு இந்த படங்கள் பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தன.

- Advertisement -

இந்நிலையில் கடைசியாக பாலா இயக்கத்தில் உருவான படம் வணங்கான். இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது சூர்யா தான். நந்தா, பிதாமகன், அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோல் என பாலாவின் 3 படங்களில் நடித்த சூர்யா, பாலாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து திடீரென விலகினார். பிறகு அந்த ரோலில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் வணங்கான் இசை வெளியீட்டு விழா, தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் எந்த மனக்கசப்பும் இன்றி தந்தை சிவக்குமாருடன் விழாவில் சூர்யா கலந்துக்கொண்டு பாலா குறித்து பெருமையாகவும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

கோவையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தின் ஷூட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாலா விழாவுக்காக மட்டுமே சென்னைக்கு வந்துள்ளார் நடிகர் சூர்யா. அன்று படப்பிடிப்பு தளத்தில் 1000 ரசிகர்களை சந்திக்க ஏற்கனவே அனுமதி தந்திருந்த நிலையில், அதை ரத்து செய்துவிட்டு பாலாவுக்காக நடந்த விழாவில் சூர்யா கலந்துக்கொண்டுள்ளார்.

வணங்கான் படத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு இப்போது சூர்யா, பாலா இருவருக்கும் நீங்கிய நிலையில், தொடர்ந்து தோல்வி படங்களை தந்துவரும் சூர்யா, அடுத்து பாலாவுடன் கைகோர்க்க வேண்டும். விரைவில் அடுத்த பட அறிவிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க வேண்டும். அப்படி ஒரு அதகளமான அறிவிப்பை எதிர்பார்த்து சூர்யா ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்