- Advertisement -
Homeபொழுதுபோக்குசுப்பிரமணி படப்பிடிப்பு தளத்தில் மிஷ்கின் செய்த தரமான சம்பவம்… சிலிர்த்துப் போன படத்தின் டைரக்டர்!

சுப்பிரமணி படப்பிடிப்பு தளத்தில் மிஷ்கின் செய்த தரமான சம்பவம்… சிலிர்த்துப் போன படத்தின் டைரக்டர்!

- Advertisement -

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து அஞ்சாதே முகமூடி துப்பறிவாளன் சைக்கோ நந்தலாலா உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் நந்தலாலா படத்தில் அவரே கதையின் நாயகனாக மனநலம் தவறிய இளைஞர் கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகர் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மிஷ்கின் இயக்கிய படங்களில் மிக சிறப்பான ஒரு திரில்லர் படமாக இருந்தது. இதில் டிடெக்டிவ் கேரக்டரில் விஷால் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் வயதான முதியவராக கே பாக்யராஜ் வில்லனாக நடித்திருந்தார். ஆண்ட்ரியா வில்லி கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

துப்பறிவாளன் படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் துப்பறிவாளன் 2ம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. முதலில் இயக்குனராக ஆர்வம் காட்டிய மிஷ்கின் இப்போது நடிகராக பிஸியாக இருந்து வருகிறார். சவரக்கத்தி மாவீரன் லியோ டிராகன் வணங்கான் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்து விட்டார்.

இயக்குனர் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் நல்ல அபிமானத்தை அங்கீகாரத்தை பெற்றவர் மிஷ்கின். ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வா என்பவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். வின்சென்ட் செல்வா தற்போது ஆர்கே செல்வா என்று தனது பெயரை மாற்றியிருக்கிறார். பிரியமுடன் யூத் ஜித்தன் போன்ற படங்களை இயக்கியவர்தான் வின்சென்ட் செல்வா.

இந்த படங்களில் எல்லாம் மிஷ்கின் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். இப்போது வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சுப்பிரமணி என்ற படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக மிஷ்கின் நடித்திருக்கிறார். நடிகர் நட்டியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் ஒரு முக்கியமான வெற்றிப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சுப்பிரமணி படம் குறித்து இயக்குனர் வின்சென்ட் செல்வா கூறியதாவது, இந்த படத்தில் மிஷ்கின் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமின்றி என்னுடைய உதவி இயக்குனராக அவர் மீண்டும் மாறி பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தில் சில காட்சிகளை மிஷ்கினே இயக்கியுள்ளார். நந்தலாலா படத்துக்கு பின் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மிஷ்கின் மீண்டும் நாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்