மிஷ்கின் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்பது சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்ததே. சமீப காலமாக மிஷ்கின், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். “மாவீரன்”, “லியோ” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து பாலாவின் “வணங்கான்” திரைப்படத்திலும் மிஷ்கின் நடித்து வருகிறார்.

மிஷ்கின் ஒரு இயக்குனராக பல உதவி இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும், அவர் பொது மேடைகளில் ஒருமையில் பேசுவது சர்ச்சைக்குள்ளாவது உண்டு. “துப்பறிவாளன் 2” திரைப்படத்தின்போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது. அந்த சமயத்தில் மிஷ்கின் பொது மேடைகளில் விஷாலை “பொறுக்கி சார் அவன்” என்று மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது இப்போதும் வைரல் ஆக வலம் வருகிறது.
மேலும் பல திரைப்பட விழாக்களிலும் மிஷ்கின் பேசுவது சர்ச்சையை கிளப்பி வருகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு அது ஒரு விதமான புரொமோஷனாக இருந்தாலும் ஒரு பக்கம் சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

“மாவீரன்”, “லியோ” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மிஷ்கினுக்கு ஒரு நடிகராக அதிக வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கதையே வேறு மாதிரி இருக்கிறதாம்.
அதாவது மிஷ்கினுக்கு தற்போது எந்த பட வாய்ப்புகளும் இல்லையாம். இதற்கெல்லாம் காரணம் அவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்தான் என்று கூறப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மிஷ்கின் மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம்.

அதாவது விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம். அத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளாராம். தயாரிப்பாளர் தாணு, கதை விவாதத்திற்காக மிஷ்கினுக்கு சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் அறை எடுத்துக்கொடுத்திருக்கிறாராம். விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மிஷ்கின் ஆண்ட்ரியாவை வைத்து இயக்கிய “பிசாசு 2” திரைப்படத்தின் நிலவரம் என்பது இப்போது வரை தெரியவில்லை.





