- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட கொட்டுக்காளி திரைப்படம் இப்படிதான் இருக்கும்... சூப்பராக கூறிய இயக்குனர் வினோத் ராஜ்... திரையில் பார்க்க...

என்னோட கொட்டுக்காளி திரைப்படம் இப்படிதான் இருக்கும்… சூப்பராக கூறிய இயக்குனர் வினோத் ராஜ்… திரையில் பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

அடுத்த மாதம் வெளியாகும் திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் ஒன்றுதான் கொட்டுக்காளி. கூலாங்கல் என்னும் திரைப்படத்தை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்த பி எஸ் வினோத் ராஜ்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் எடுத்திருந்தது.

 

- Advertisement -

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், பல்வேறு விருதுகளை வென்றது. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் வசூலில் எந்த ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்படியான சூழலில் தான் தற்போது அந்த இயக்குனர், கொட்டுக்காளி படத்தை எடுத்திருக்கிறார்.

 

- Advertisement -

இந்த படத்தை தயாரிப்பது வேறு யாரும் அல்ல, நடிகர் சிவகார்த்திகேயன் தான். நீண்ட நாட்களாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவு பெற்றது. இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார் சூரி. ஏற்கனவே விடுதலை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நகைச்சுவை நடிகர் என்னும் முகத்திரையைக் கிழித்து கதாநாயகனாக அவர் வலம் வந்து வருகிறார்.

 

இதில் அவரை கமர்சியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்த வைத்தது கருடன் திரைப்படம். சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம், வசூலை அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்திற்காக, தொண்டை இறுகிய நிலையில் பேச வேண்டும் என்பதால், மருத்துவரை அணுகி அதற்காக மரப்பட்டைகளை எடுத்துக்கொண்டு தனது குரலை மாற்றி நடத்தி இருக்கிறார் சூரி. இந்த திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தற்போது பல விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம், அடுத்த மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இந்நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பி எஸ் வினோத்குமார், ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போது அதன் வியாபாரம் விரிவடைகிறது. இந்தப் படத்தின் கதை ஒரு பயணம் தான் அந்தப் பயணத்தின் வாயிலாக கிராம மக்களின் வாழ்க்கையை நாங்கள் கூறுகிறோம். இதற்கு பொருத்தமாக மலையாள நடிகை அன்னா பென் இருப்பார் என தேர்வு செய்து அவரை நடிக்க வைத்தேன். சூரியை இன்னொரு பரிமாணத்தில் காட்டும் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

சற்று முன்