- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதிக்கும் கவலை இல்லே… மிஷ்கினுக்கும் கவலை இல்லே - என்ன கொடும சார் இது...

விஜய் சேதுபதிக்கும் கவலை இல்லே… மிஷ்கினுக்கும் கவலை இல்லே – என்ன கொடும சார் இது என்று ஆச்சரியப்படும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் பிஸியாக இருக்கும் சில நடிகர்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒருவர். விஜய் தேவர கொண்டா ரெட்டி படத்தில் வில்லன் கேரக்டர் பூரி ஜெகநாதன் இயக்கும் படத்தில் பிச்சைக்கார கேரக்டர் ஜெயிலர் 2 படத்தில் வில்லன் கேரக்டர் என்று பரபரப்பாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தோன்றி விடுகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பிசாசு 2 மற்றும் டிரெயின் ஆகிய 2 படங்களும் இன்னும் திரைக்கு வராமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த படங்கள் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கூட தெரியாத நிலையில் அடுத்தடுத்த படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

அதே போல் பிசாசு 2 மற்றும் டிரயெின் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மிஷ்கின்தான். அவரும் தனது இயக்கத்தில் உருவான படங்கள் பல மாதங்கள் கடந்தும் இன்னும் திரைக்கு வராமல் இருப்பது குறித்து கவலைப்படாமல் நடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

தனது குருநாதர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் சுப்ரமணி என்ற படத்தில் கதையின் நாயகனாக மிஷ்கின் சம்பளம் வாங்காமல் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் அவர் கமிட் ஆகி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே டிவி சேனல் ஒன்றிலும் நடுவராக மிஷ்கின் பங்கேற்று பேசி வருகிறார்.

ஒரு நடிகராக விஜய் சேதுபதியும் ஒரு இயக்குனராக மிஷ்கினும் அவர்கள் நடித்த இயக்கிய 2 படங்கள் திரைக்கு வராமல் ரசிகர்களின் பார்வைக்கு செல்லாமல் பல மாதங்களாக முடங்கி கிடப்பது குறித்து எந்த கவலையும் இல்லாமல் அவர்களது அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருவது சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. அல்லும் பகலும் உழைத்து உருவாக்கிய 2 படங்கள் ரிலீஸாகாமல் முடங்கி இருப்பதை எப்படி இவர்களால் இப்படி ஒரு விஷயத்தை சாதாரணமாக பார்க்க முடிகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்