- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் வராவிட்டால் கண்டிப்பாக விக்ரம் வந்து விடுவார், பொங்கல் பண்டிகை படங்கள் ரேஸில் யார் யாரெல்லாம்...

அஜீத்குமார் வராவிட்டால் கண்டிப்பாக விக்ரம் வந்து விடுவார், பொங்கல் பண்டிகை படங்கள் ரேஸில் யார் யாரெல்லாம் வரப்போறாங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான 210க்கும் மேற்பட்ட படங்களில் 9 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி கடந்திருக்கின்றன. இதில் விஜய் நடித்த தி கோட் ரூ. 455 கோடி, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ரூ. 310 கோடி, ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரூ. 250 கோடி என்ற அளவில் பெரிய வசூல் சாதனையை செய்திருக்கின்றன.

அடுத்து கங்குவா, தங்கலான், மகாராஜா, அரண்மனை 4, ராயன், இந்தியன் 2 ஆகிய படங்கள் ரூ. 100 கோடியை கடந்திருக்கின்றன. ஆனால் ரூ. 200 கோடி வசூலை கடக்கவில்லை. அதே நேரத்தில் லப்பர் பந்து, ஸ்டார், லவ்வர், சித்தா, வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த படங்களாக இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் விஜய் நடித்து வரும் தளபதி 69 படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆகிறது. ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி, ஜெயிலர் படங்கள் அடுத்த ஆண்டில் ரிலீஸாகின்றன. இந்த சூழலில் அஜீத்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

ஆனால் படத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் விலகிய நிலையில், ஜீவி பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார். இன்னும் 4 பாடல்கள் இந்த படத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ள நிலையில், இன்னும் 50 நாட்களில் படத்தை தயார் செய்து, போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை முடித்து ரிலீஸ் செய்ய முடியுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் ஒருவேளை அஜீத்குமார் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி பொங்கலுக்கு வராது என்று உறுதியாகும் பட்சத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அந்த படத்தின் இயக்குனர் அருண் குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் டீசரை தயார் செய்து வைத்து காத்திருக்கிறது.

இதுவரை ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர், பாலா இயக்கத்தில் வணங்கான், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற 3 படங்கள் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அஜீத்குமார் படம் வராத பட்சத்தில் சியான் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. அஜீத் பட அறிவிப்புக்காக, விக்ரம் படக்குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்