- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது, கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய அந்த எம்எல்ஏ இழிவானவன் மலிவானவன் மட்டமானவன். தவெக என்ற ஒரு அமைப்பில் இருந்துக்கொண்டு இப்படி தரம்கெட்ட முறையில் நடந்து கொண்டதை ஏற்க முடியாது. அந்த எம்எல்ஏ மீது தலைவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று எனக்கு தெரியாது. அதிலும் ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவரை கண்ணியம் மிக்க பெருமைக்குரிய ஒரு பெண்மணியை இந்த நாட்டில் ஆபாசமாக சித்தரித்தது ஏற்கத்தக்கதல்ல. ஆனால் அதற்கு அவர் சமாதானம் சொல்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க முடியாது என்று நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.





