தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடைசியாக அவரது நடிப்பில் கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தாளத்தில் வெளியான மகாராஜா படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சீனாவிலும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மகாராஜா படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகாசவீரன் என்ற படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதேபோல் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது தவிர விஜய் சேதுபதி நடித்த ஏஸ் என்ற படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. நடிகை சார்மியுடன் இணைந்து இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை தபு நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன் நாத். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அந்தப் படங்கள் தோல்வி படங்கள் என்றே கூறப்படுகின்றன.
இந்நிலையில் தோல்வி படங்களை தந்த பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, என்னுடைய இயக்குனர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிட மாட்டேன். எனக்கு கதை பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அந்த திரைப்படம் ஒரு முழுமையான ஆக்சன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதைக்களத்தில் இதற்கு முன் நான் நடிக்கவில்லை. நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.





