- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதில் இருந்து, விக்னேஷ் சிவனை கழட்டி விட்ட நடிகை நயன்தாரா, கண்ணீருடன் அந்த பதிவில் அவர்...

அதில் இருந்து, விக்னேஷ் சிவனை கழட்டி விட்ட நடிகை நயன்தாரா, கண்ணீருடன் அந்த பதிவில் அவர் சொல்வது குட் பை யா? – சோணமுத்தா போச்சா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2005ம் ஆண்டில் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ரஜினி, விஜய், அஜீத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு என ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்து, மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

வல்லவன் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கு சிம்புடன் காதல் ஏற்பட்டது. இருவரும் உதட்டு முத்தம் தரும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினர். சில ஆண்டுகளில் அது பிரேக்கப் ஆனதால், அடுத்து பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரும் திருமணம் செய்ய மறுத்துவிட அவரை விட்டும் நயன்தாரா பிரிந்தார்.

- Advertisement -

கடந்த 2017ம் ஆண்டில் நானும் ரவுடிதான் என்ற படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அப்போது படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 7 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த அவர்கள் இருவரும், கடந்த ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். இரட்டை பிள்ளைகளுக்கு வாடகைத்தாய் மூலம் பெற்றோர் ஆகினர்.

நடிகை நயன்தாராவுக்கு சமீபமாக படங்கள் சரியாக போவதில்லை அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த அவரது 75வது படம் அன்னபூரணி மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. அருண் காமராஜ் இயக்கத்தில் ஒரு படமும், எல்ஐசி படத்திலும் முதலில் நடிக்க கமிட் ஆன அவர், பின் அந்த படங்களில் இருந்து விலகிக்கொண்டார். இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்துள்ளார். அதாவது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, விக்னேஷ் சிவனை விலக்கி விட்டார்.

அதுமட்டுமின்றி, நயன்தாரா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள், என்று பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவனை தனது வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியதுடன், அவரது இந்த பதிவும் விக்னேஷ் சிவனை, நயன்தாரா விரைவில் பிரியப் போகிறாரா, என்ற சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரது பதிவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்