நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, விஸ்வரூபம் 1 மற்றும் 2, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
ஆண்ட்ரியா, பின்னணி குரல் கலைஞராகவும் இருக்கிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் கொடுத்தது ஆண்ட்ரியா தான். ஆனால் பலருக்கும் அவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதே தெரியாது. இந்த 3 படங்களுமே வெற்றிப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஆண்ட்ரியா பாடகியாகவும் இருக்கிறார். பல ஹிட் பாடல்களை பாடியது ஆண்ட்ரியா என்பது பலருக்கும் தெரியாது. புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசைதான், ஆதவன் படத்தில் ஏனோ ஏனோ பனித்துளி உள்ளிட்ட பாடல்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இசையமைப்பாளர் அனிரூத் – ஆண்ட்ரியா நெருககமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்ற பேச்சும் அடிப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், இப்போது புதிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷ், ஆண்ட்ரியாவை 2வது திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷூம், ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழும் நிலையில், இன்னும் விவாகரத்து செய்யவில்லை. தவிர வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். தனுஷ், ஐஸ்வர்யா இரண்டு தரப்பிலும் பெற்றோர்கள், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருவருமே மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். ஆனால் இப்படி ஒரு பரபரப்பான தகவல் பரவி வருகிறது. இது உண்மையா, உருட்டா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.





