- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம், சுந்தர் சி எடுத்த...

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நடிகை நயன்தாராவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம், சுந்தர் சி எடுத்த அந்த முடிவுதான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அவரது நடிப்பில் சமீபத்தில் டெஸ்ட் என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் நயன்தாராவுடன் மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் காளி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இப்போது நடிகை நயன்தாரா, சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகிறது. இதில் நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி இயக்குனர் சுந்தர் சி சம்பளம் ரூ. 20 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாகவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை நயன்தாரா. சென்னையை சுற்றி 50 கிமீ சுற்றளவில்தான் ஷூட்டிங்கை வைத்துக்கொள்ள வேண்டும். வெளியூர்களில் நடக்கும் ஷூட்டிங் என்றால் வர மாட்டேன். சென்னையில் ஷூட்டிங் நடந்தாலும் காலை 11 மணிக்கு வந்துவிட்டு மாலை 4 மணிக்கு கிளம்பி விடுவேன். இரவு நேர ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டேன் என்று பல நிபந்தனைகளை விதிப்பது நயன்தாராவின் வழக்கம்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன் பிள்ளைகளை அழைத்து வரும் நயன்தாரா, பெரும்பாலும் கேரவனுக்குள் நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவார். தனது பவுன்சர்கள் மற்றும் தன் குழந்தைகளை பராமரிக்க வரும் செவிலியர்கள் என அவர்களுக்கான சம்பளமாக பல லட்சம் ரூபாய் அந்த படத்தின் தயாரிப்பாளர் தினமும் தந்துவிட வேண்டும். மேலும் கிளிசரின் போட்டு அழும் காட்சிகளிலும் நயன்தாரா நடிக்க மறுப்பவர்.

ஆனால் சுந்தர் சி இயக்கத்தில் இப்போது அவர் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தளத்தில் மிகவும் மாறுபட்டவராக காணப்படுகிறார். கேரவனுக்கு செல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அதிக நேரத்தை செலவிடுகிறார். நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறார். இயக்குனர் சொல்கிறபடி காட்சிகளில் நடிக்கிறார். எந்த நிபந்தனைகளையும் விதிப்பதில்லை என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்திப்பதால் ஏற்பட்ட மாற்றமா, அல்லது சுந்தர் சி இந்த படத்தில் நயன்தாரா சரியாக ஒத்துழைத்து நடிக்கவில்லை என்றால் அவரை நீக்கிவிட்டு தமன்னாவை நடிக்க செய்துவிடுவார் என்ற தகவல் பரவியதால் ஏற்பட்ட மனமாற்றமா, அல்லது சுந்தர் சி பெரிய இயக்குனர் என்பதால் நயன்தாரா அடக்கி வாசிக்கிறாரா என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு எழுந்துள்ளன.

சற்று முன்