- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் தயாரிப்பாளராக கைகோர்க்கும் நடிகை நயன்தாரா - ஹீரோ பேரை கேட்டா...

தமிழில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் தயாரிப்பாளராக கைகோர்க்கும் நடிகை நயன்தாரா – ஹீரோ பேரை கேட்டா சும்மா அதிருதுல்ல…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் அன்னபூரணி. இது அவரது 75வது படமாகவும் இருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்திலும், நடிகர் கவினுடன் ஒரு படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

மலையாளத்தில் லோக்கல் டிவி சேனலில் காம்பியராக இருந்தவர் நயன்தாரா. அவரை மனசிக்கரே என்ற மலையாள படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சத்தியன் அந்திகாட். மனச்சிக்கரே என்ற இந்த படம் 2003ம் ஆண்டில் வெளியானது. டயானா மரியம் குரியன் என்ற பெயரை, மனச்சிக்கரே படத்துக்காக நயன்தாரா என மாற்றியவரும் இயக்குனர் சத்தியன் அந்திகாட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த மலையாள படத்தில் நடித்த பிறகுதான், தமிழில் 2005ம் ஆண்டில் வெளியான ஐயா படத்தில் நடிகை நயன்தாரா நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தில் நடிகர் சரத்குமார் 2 வேடங்களில் நடித்திருந்தார். இதில் அப்பா சரத்குமாருக்கு லட்சுமியும், மகன் சரத்குமாருக்கு நயன்தாராவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்போது இயக்குனர் ஹரி இயக்கும் ஒரு படத்தை தயாரிக்க நடிகை நயன்தாரா முன்வந்துள்ளார். அவரது ரவுடி பேபி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஹரியுடன் இந்த படத்தை தயாரிக்க நயன்தாரா முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் ஹரி கோவில், சாமி, சிங்கம், பூஜை என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். படப்பிடிப்பு தளத்திலும், நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதிலும் திட்டமிட்டபடி பணியை முடிப்பதிலும் என எல்லாவற்றிலும் பர்பெக்ட் ஆக இருப்பவர். அவருடன் தயாரிப்பாளராக நயன்தாரா இணக்கமாக நடந்துக்கொண்டு படப்பிடிப்பு முழுமையாக சரியாக நடிக்க சரியாக ஒத்துழைப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் நயன்தாரா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் நாயகனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை ஹரி இயக்கத்தில் கமர்ஷியல் நாயகனாக விஜய் சேதுபதி நடித்தது இல்லை. மகாராஜா போன்ற படத்தில் நடித்துவிட்டு, கமர்ஷியல் கேரக்டரில் அவர் நடிப்பாரா என்பதும் கேள்வியாக உள்ளது. எனினும் ஹரி, விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் புதிய படம் உருவாகும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்