இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிசெய்து பிறகு பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம் விசாரணை வடசென்னை அசுரன் விடுதலை படங்களை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் வெளியாக உள்ளது.
வெற்றிமாறனை பொருத்த வரை, கமர்ஷியல் இயக்குனராக இல்லாமல் ஒரு நல்ல படைப்பாளியாக தன் படங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். படத்தின் கதை, திரைக்கதை தான் ஹீரோவே தவிர, ஹீரோயிசத்தை நம்பி அவர் படம் இயக்குவதில்லை. அதனால்தான் காமெடி நடிகர் சூரி, விடுதலை படத்தின் நாயகனாக மாறி வெற்றி பெற்றார்.
அதே போல், ஒரு திரைப்படம் என்பது ஏதாவது ஒரு புள்ளியில் இந்த சமுதாய அமைப்பின் தாக்கத்தை, பிரச்னைகளை பேசுவதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் வெற்றிமாறன் அதிக கவனம் செலுத்துகிறார். அதனால் திரைப்படம் என்பது மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்தையும் கடந்து நிற்க அது முக்கிய காரணமாகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ஆடுகளம். மதுரை கதைக்களத்தில் உருவான இந்த படம், சேவல் சண்டையை மையப்படுத்தியது. இதில் தனுஷ், டாப்ஸி, ஜெயபாலன், நரேன், கிஷோர் போன்றவர்களின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் குறித்த சில விஷயங்களை இயக்குனர் வெற்றிமாறன், ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
அதுகுறித்து வெற்றிமாறன் கூறியதாவது, ஆடுகளம் படத்துக்கு நாங்க முதலில் வைத்த டைட்டில் சண்டக்கோழி. ஆனா நாங்க அந்த பேரை வைக்குறதுக்கு முன்னாடியே அந்த பேர்ல படம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் சேவல்ன்னு பேர் வைக்கலாமுன்னு போனா ஹரி அதை செலக்ட் பண்ணிட்டார். ஆனா அந்த பேரை வெச்சு கோவிலில் பூஜை பண்ணிட்டதால் அந்த டைட்டிலை எங்களுக்கு தர முடியலை. அதை அவரே போன்ல சொன்னார்.
அப்புறம் நாங்களா பேசி முடிவு செய்ததுதான் ஆடுகளம் பெயர் வைத்தோம். அந்த டைட்டில் கொஞ்சம் கிளாசியா இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் ஹீரோ தனுஷ், சொன்னதும் இதுதான் சூப்பர் டைட்டில் என்றார். அவர் டைட்டில் நன்றாக இருப்பதாக சொன்னால் அது அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அதனால் அவரது சம்மதம் பெரிய திருப்தியை எனக்கு கொடுத்தது.





