- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 நாட்களுக்கு ரூ. 8 கோடி சம்பளம், ஜெயம் ரவியுடன் நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்...

15 நாட்களுக்கு ரூ. 8 கோடி சம்பளம், ஜெயம் ரவியுடன் நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன் – விரக்தியடைந்த இயக்குனர் கடைசியில் செய்ததுதான் ஹைலைட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. அப்படி தன்னை அழைப்பது பிடிக்காது என்று நேர்காணலில் அவர் கூறினாலும், நிஜத்தில் அப்படி தனது பெயரை திரையில், விளம்பரங்களில் போட வேண்டும் என்று இயக்குனர், தயாரிப்பாளரிடம் அவர் கண்டிஷன் போடுவது வழக்கம் என்கின்றனர் சினிமாத்துறை சார்ந்தவர்கள்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அவரது திருமணம் உள்ளிட்ட வாழ்க்கை சம்பவங்களை உள்ளடக்கிய ஆவணப்படம் வெளியானது. இதில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு காட்சிகளை, அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷின் அனுமதியின்றி பயன்படுத்திய விவகாரம் பெரிய அளவில் வெடித்தது. இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இறைவன். இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜெயம் ரவி நடித்த தொடர் தோல்வி படங்களில் அகிலன் சைரன் 108 பிரதர் படங்களின் வரிசையில் இறைவன் படமும் குறிப்பிடத்தக்க ஒன்று. இறைவன் படம் மிக மோசமான தோல்வியை தழுவிய படம்.

இறைவன் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம் குறித்த தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இறைவன் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 15 நாட்கள் கால்ஷீட் பேசப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு ரூ. 15 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. இதுதவிர அவரது உதவியாளருக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் தனியாக தரப்பட்டுள்ளது.

- Advertisement -

அதில் முதல் 2 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் வந்த நயன்தாரா, இனி நான் மதியம் 2 மணிக்கு வந்து, 10 மணி வரை நடிக்கிறேன். காலை நேரத்தில் ஷூட்டிங் வர முடியாது என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார். காலை முதல் மதியம் 2 மணி வரை மற்ற நடிகர்களுடன் நீங்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் இருக்கிறதே, என்ன செய்வது என்று கேட்டதற்கு சினிமா பற்றி உனக்கு அதிகமாக தெரியுமா, எனக்கு தெரியுமா என்று விதண்டாவாதம் பேசியிருக்கிறார்.

வேறு வழியின்றி அதற்கு ஒத்துக்கொண்ட இயக்குனர், அவர் சொன்னபடி அந்த 15 நாட்களும் பகல், இரவு என ஷூட்டிங்கை ஒருவழியாக நடத்தி முடித்திருக்கிறார். கடைசி நாளில், நயன்தாரா ஷூட்டிங் முடித்துவிட்டதற்கான போட்டோ ஷூட் நடத்திய போது, அதில் வந்து நிற்க விரும்பாமல் இயக்குனர் எங்கோ வெளியே சென்றுவிட்டார். அதுவரை காத்திருந்து இயக்குனர் வந்த பிறகு அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு நயன்தாரா அங்கிருந்து சென்றிருக்கிறார் என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. இப்படி அட்ராசிட்டி பேர்வழியாக இருக்கிறாரே நயன்தாரா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்