லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன் தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் ஆரம்பத்தி டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டே மாடலிங்கிலும் ஈடுபட்டார். பிறகு தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார்.
இப்படிப்பட்ட சூழலில் சிம்புவுடன் சேர்ந்து வல்லவன் படத்தில் நடித்தபோது அவருக்கு காதல் ஏற்பட்டது. சிம்பு – நயன் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் காதல் பாதியில் முடிந்தது. அதன் பின் படஙக்ளில் நடித்த அவர் பிரபுதேவாவை காதலித்தார். அந்தக் காதலும் முறிந்தது. இந்த இரண்டு காதல் முறிவுகளை வைத்து நயன் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் ரொம்பவே நடந்தன.
ஆனால் அதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாத அவர் இரண்டாவது இன்னிங்ஸில் தரமான கம்பேக் கொடுத்தார். அப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த அவர் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவானில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி ஆகியிருக்கிறார்.
நயன் தாராவுக்கு உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதுதா. திரைப்பட துறைக்காகத்தான் தன்னுடைய பெயரை நயன் தாரா என்று அவர் மாற்றிகொண்டார். இந்நிலையில் அவருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், “நான் மாடலிங் செய்துகொண்டிருந்தபோது மலையாள இயக்குநரான சத்யன் அந்திகாட் என்பவர் என்னை படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து என்னிடம் கேட்டார். நானும் ஒத்துக்கொண்டேன்.
மனசினக்கரே எனும் படத்தில் என்னை கமிட் செய்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் என்னை அவர் அழைத்து உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் நாட்கள் ஆக ஆக படத்துக்கும் பெயர் வைக்கவில்லை. எனக்கும் பெயர் வைக்கவில்லை. பிறகு ஒருநாள் படத்துக்கு பெயர் வைத்துவிட்டார்கள். நான் இயக்குநரிடம் சென்று எனக்கு பெயர் வைக்கிறீர்களா இல்லையா என்று கேட்டேன்.
அவர் உடனே 20லிருந்து 30 பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடு என்று சொல்லி லிஸ்ட்டை கொடுத்துவிட்டு அவர் ஷாட்டுக்கு சென்றுவிட்டார். நான் அந்த லிஸ்ட்டில் பார்த்தபோது நயன்தாரா என்ற பெயர் பிடித்திருந்தது. உடனே நான் அதை தேர்ந்தெடுத்தேன். எனக்கு நானே பெயர் வைத்துக்கொண்டேன்” என்றார்.





