- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 பிரபல ஹீரோக்களுடன் நயன்தாரா நடித்த படம்; தியேட்டருக்கு வரலையாம், நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் பண்றாங்களாம்...

2 பிரபல ஹீரோக்களுடன் நயன்தாரா நடித்த படம்; தியேட்டருக்கு வரலையாம், நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் பண்றாங்களாம் – ஏம்பா இப்படி பண்றீங்க?

- Advertisement -

நடிகை நயன்தாரா தமிழில் கடைசியாக நடித்து வெளியான படம் அன்னபூரணி. இது அவரது 75வது படமாகவும் இருந்தது. ஜெய் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நயன்தாரா, அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக நயன்தாரா இருக்கிறார். அதே போல் அவருக்கு போட்டியாக ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் போட்டி நடிகையாக திரிஷா இருக்கிறார்.

- Advertisement -

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு அவருக்கான பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மலையாளத்தில் ஐடென்டி தமிழில் லியோ விடாமுயற்சி குட் பேட் அக்லி பேட்டைக்காரன் படங்களில் நடித்துவரும் திரிஷா தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வாம்பரா படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர்கள் மாதவன், சித்தார்த் ஆகியோருடன் நயன்தாரா நடித்த படம் டெஸ்ட். தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.

- Advertisement -

நயன்தாரா படம் ரிலீஸாகி பல மாதங்களாகி விட்ட நிலையில், டெஸ்ட் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது தகவல் வந்துள்ளது. அதன்படி டெஸ்ட் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது. நேரடியாக ஓடிடி தளத்தில்தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஓடிடி தளத்தின் பெயர், ரிலீஸாகும் தேதியை அதில் அறிவிக்க உள்ளனர். ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், ஓ2, நெற்றிக்கண் ஆகிய படங்கள் ஓடிடியில் தான் ரிலீஸானது என்பதால், இந்த படமும் ஓடிடியில் வெளியாவதாக கூறப்படுகிறது. ஆனால் தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பலதரப்பட்ட ரசிகர்களும் பார்க்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்