- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் நஸ்ரியா வருகிறாரா... அது சரி அவருக்கு என்ன விதமான ரோல் என்று...

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் நஸ்ரியா வருகிறாரா… அது சரி அவருக்கு என்ன விதமான ரோல் என்று தெரியுமா?…

- Advertisement -

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக வெங்கி, துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்தார். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான அந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மாநிலங்களிலும் அந்த திரைப்படம் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி, சூர்யாவுடன் கைகோர்த்திருப்பதால் அந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழுக்க முழுக்க குடும்பங்களை மையப்படுத்தி, குடும்ப உறவுகளைப் பற்றி இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படம் குறித்து பேசிய வெங்கி, ஃபேமிலி ஆடின்ஸுகளுக்காக இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடித்து வருகிறார். ராதிகா, ரவீனா டான்டன் உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர் இந்த திரைப்படத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குனர் ஜித்து மாதவனுடன் இணைகிறார் சூர்யா. ஏற்கனவே ஜித்து மாதவன் இதற்கு முன்னதாக ஆவேசம் எனும் அல்டிமேட் திரைப்படத்தை கொடுத்திருந்தார். பகத் பாஸில் அதில் ஹீரோவாக நடித்திருந்தார்.

- Advertisement -

மலையாளத்தில் மட்டும் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும், அந்த மாநிலத்தை தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் கதையும், பகத் பாசிலின் நடிப்பும் அருமையாக இருந்ததால் ஆவேசம் திரைப்படத்தை இங்கு கொண்டாடினார்கள். இப்படியான சூழலில் அந்த இயக்குனர் சூர்யாவுடன் இணைந்திருப்பது அவரது ரசிகர்களை ஆனந்தப்படுத்தி இருக்கிறது.

இதற்காக ஜித்து மாதவன் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சென்னையில் தங்கி வேலை பார்த்து இருக்கிறாராம். படத்தில் நஸ்ரியா நசீமும் இருப்பதாக சொல்கிறார்கள். அவரை நடிக்க வைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சூர்யாவுக்கு தங்கையாக அவர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. போலீஸ் ஸ்டோரியை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்