- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனராக அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து பட நாயகி... இவர் ஏற்கனவே அந்த திரைப்படத்தின் உதவி...

இயக்குனராக அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து பட நாயகி… இவர் ஏற்கனவே அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனரா… ஆச்சரியப்படும் கோலிவுட்…

- Advertisement -

2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் லப்பர் பந்து. கனா உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழரசன் பச்சமுத்து தான் இந்த படத்தின் இயக்குனர். கிராமத்துக் கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றியை பெற்றது.

இத்தனைக்கும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மிக மிக குறைவு தான். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதையை நகர்த்திய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, அதில் குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், காதலின் வலியையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.

மிக முக்கியமாக இந்த திரைப்படத்தில் நடித்த பலரும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து செயல்பட்டனர். அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து பூமாலையாக அவதாரம் எடுத்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார். இதேபோல், அன்பு கதாபாத்திரத்திற்கும் சரியாக பொருந்திப் போனார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணமே அதில், கணவன் மனைவி, மாமியார் மருமகள், காதலும் காதலி ஆகியோர் இடையேயான உறவை மிகுந்த யதார்த்தத்துடன் கூறியதுதான். லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளான சுவாசிகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவரும் பாராட்டைப் பெற்றனர்.

குறிப்பாக மலையாளத்தில் இருந்து தமிழில் நடித்த சுவாசிகா, இந்தத் திரைப்படத்தில் யசோதை கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். இதில் நடித்திருந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வதந்தி என்னும் வெப் தொடரின் மூலம் அறிமுகமாகி இருந்தார். நடிப்பைத் தாண்டி இவருக்கு இயக்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறதாம்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைப் திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்துள்ளார். இப்படியான சூழலில் தற்போது அவர் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்