- Advertisement -
Homeபொழுதுபோக்குகணவருக்கு மகுடம் சூட்டிய தமிழ் சினிமா, மனைவிக்கு நோ சான்ஸ் - வெப் சீரிஸ்க்கு தாவிய...

கணவருக்கு மகுடம் சூட்டிய தமிழ் சினிமா, மனைவிக்கு நோ சான்ஸ் – வெப் சீரிஸ்க்கு தாவிய பிரபல நடிகை

- Advertisement -

சினிமாவில் நடிக்கும் சிலர் நட்சத்திர தம்பதிகளாக இருக்கின்றனர். ஹீரோ – ஹீரோயினாக படங்களில் நடிக்கும் போது, அவர்களுக்குள் ஏற்படும் காதல், அவர்களை நிஜ வாழ்க்கையிலும் இணைத்து விடுகிறது. அப்படி பலர், இன்றைய நட்சத்திர தம்பதிகள், தமிழ் சினிமாவில் உள்ளனர்.
பகத் பாசில், மலையாளப்பட இயக்குநர் பாசில் மகன். காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் இயக்குநர் பாசில். தமிழில் கமல்ஹாசனை போல, மலையாள படவுலகில் மிகச்சிறந்த நடிகராக வளர்ந்து வருபவர் அவரது மகன் பாசில். சிறந்த நடிகருக்கான விருதுகள் பலவற்றை பெற்றுக்கொண்டே இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

பகத் பாசில், தமிழில் நடித்த முதல் படம் வேலைக்காரன். நடிகர் சிவகார்த்திகேயனுடன், ஆண்டி ஹீரோவாக நடிப்பில், இந்த படத்தில் அதகளம் செய்திருந்தார். கார்பரேட் முதலாளியின் மகனாக, மார்க்கெட்டிங்கில் சாதிப்பது குறித்த இவரது நடிப்பு, பிரமாதமாக இருந்தது. அடுத்து, விக்ரம் படத்தில், க்ரைம் டிடெக்டிவ்வாகவும், சமீபத்தில் வந்த மாமன்னன் படத்தில், ரத்னவேலு கேரக்டரிலும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார் பகத்பாசில்.

- Advertisement -

அதனால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க பகத் பாசிலுக்கு இயக்குநர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதில், தனக்கு நல்ல நடிப்பை தருவதற்கான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து, சம்மதம் தெரிவித்து வருகிறார் பகத் பாசில். அதனால், இனி அடுத்தடுத்து வரும் தமிழ் படங்களில் நிச்சயம் பகத் பாசிலை எதிர்பார்க்கலாம்.

நஸ்ரியா, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி, நேரம், வாயை மூடி பேசவும், நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இவரது கணவர்தான் நடிகர் பகத்பாசில்.

- Advertisement -

தமிழ் படங்களில் நஸ்ரியாவுக்கு ஒரு கட்டத்துக்கு பிறகு வரவேற்பு கிடைக்கவில்லை. அவரை தேடி தமிழ் பட வாய்ப்புகள் இல்லாததால், மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். தனது கணவர் பகத் பாசிலுக்கு தமிழ் படங்களில் தொடர் வாய்ப்பு கிடைத்து வருவதால், மீண்டும் அவர் தமிழ் படங்களில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, நஸ்‌ரியா இப்போது தமிழில் ஒரு வெப்சீரிஸ்சில் நடித்து வருகிறார். சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கடந்த 15 தினங்களாக இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த வெப்சீரிஸ்சின் தயாரிப்பாளர் ஏ.எல் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்