தமிழ் திரையுலகில் பல சதாப்தங்களாக கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 2010 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். எந்திரன் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு வெற்றியை தேடி கொடுத்தாலும், பெரும்பாலான படங்கள் ரஜினி படமே இன்னும் தெரியாத அளவுக்கு படுதோல்வி அடைந்து திரையரங்குகளில் இருந்து வெளியேறியது.
கோச்சடையான், லிங்கா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் ரஜினிக்கு பெருத்த அடியை கொடுத்ததால், நிச்சயமாக ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சூப்பர் ஸ்டார் இருந்தார். இப்படியான நேரத்தில் தான் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் திரைப்படங்களை எடுத்த நெல்சன் கதையை டிக் செய்தார் ரஜினிகாந்த்.
இதில் மலையாள பிரபல மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தோல்விகளால் துவண்டு இருந்த சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது ஜெயிலர் திரைப்படம்.
விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும், சில மாஸ் காட்சிகளை சரியான இடத்தில் நெல்சன் வைத்தது ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் கட்சியில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலை பயன்படுத்திய விதம் பலருக்கும் பிடித்துப் போனதால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலும் ஜெயிலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதன் வெற்றியால் உற்சாகமாய் இருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கும் அவர், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ரித்திகா சிங் உள்ளிட்ட ஏராளமான நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தை குறித்து சில விஷயங்களை நெல்சன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினியை நடிக்க வைப்பதற்கே நான் விரும்பவில்லை. அவர் இதுபோல் நிறைய படங்களில் நடித்து விட்டதால் அது ரஜினிக்கு சரியாக இருக்காது என பலர் என்னிடம் கூறினார்கள். படப்பிடிப்பு நடந்த 10 நாட்களுக்குப் பிறகு தான் எனக்கு ஒரு மன உறுதியே வந்தது என்று தெரிவித்துள்ளார்.





