- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க நேரத்தை வீணாக்காது, சொன்னா நம்புங்க… அவர்கிட்ட ஒரு மந்திரம் இருக்கு - நேஷனல் கிரஷ்...

உங்க நேரத்தை வீணாக்காது, சொன்னா நம்புங்க… அவர்கிட்ட ஒரு மந்திரம் இருக்கு – நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா விடுத்த வேண்டுகோள்!

- Advertisement -

இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களில் பலரும், படம் நல்லா இல்லாமல் போய்விட்டால் டிக்கெட் கட்டணமாக கொடுத்த பணத்தை கூட பெரிதாக நினைப்பது இல்லை. ஆனால் தங்களது பொன்னான 2.5 மணி நேரத்தை 3 மணி நேரத்தை வீணாக்கி விட்டார்களே என்றுதான் புலம்புகின்றனர். அதிகமாக கோப்பபடுகின்றனர்.

அதே நேரத்தில் படம் நன்றாக இருக்கும் பட்சத்தில், 3 மணி நேரம் நீளமான படமாக இருந்தாலும் சங்கடப்படுவதில்லை. படம் 3 மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. அந்தளவுக்கு விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றுவிட்டார்கள் என்று படக்குழுவையும் இயக்குனரையும் பாராட்டி விடுகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் அதிக நேரம் கொண்ட படங்களான வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் கங்குவா வேட்டையன் தக்லைஃப் என பல படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் சோதித்து விட்டன. புஷ்பா 2 படம் கூட ஒன்றரை மணி நேரத்துக்கு பின் வருகிற கதை, புஷ்பா 3ம் பாகம் போல உள்ளது என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் குபேரா படம் 3 மணி நேரம் 15 நிமிட படமாக தெலுங்கில் வெளியாகி உள்ளது. தமிழில் 3 மணி நேரம் 1 நிமிடம் என படத்தின் நீளம் குறைக்கப்பட்டு, 14 நிமிட காட்சிகள் குபேரா படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. எனினும் குபேரா படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களே இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இயக்குனர் சேகர் கம்முலாவிடம் ஏதோ ஒரு மந்திரம் உள்ளது. அதுதான் சமீரா கேரக்டரில் என்னை இந்த அளவுக்கு நடிக்க வைத்திருக்கிறது. கலைத்துறையின் மீது அவருக்கு இருக்கும் காதலை அவரது படங்களின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.

அதுதான் அவருடன் இணைந்து பணியாற்ற எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது. குபேரா படத்தில் என்னை ரசிகர்கள் அனைவரும் சமீராவாகவே பார்க்க இயக்குனரின் பங்களிப்பு தான் காரணம் என்றும், இந்த படம் உங்கள் நேரத்தை வீணடிக்காது; நம்புங்கள் என்றும் ராஷ்மிகா மந்தனா அந்த பதிவில் கூறி இருக்கிறார். மேலும் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்