- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சீன் தியேட்டர்ல வரும்போது நானே எந்திரிச்சி நின்னுட்டேன். ஜெயிலர் குறித்து - நெல்சன் நெகிழ்ச்சி

அந்த சீன் தியேட்டர்ல வரும்போது நானே எந்திரிச்சி நின்னுட்டேன். ஜெயிலர் குறித்து – நெல்சன் நெகிழ்ச்சி

- Advertisement -

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிய ஜெயிலர் படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூலில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகம், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் தோல்வியை சந்தித்ததற்கு பிறகு தற்போது மீண்டும் ஜெயிலர் படம் மூலம் ரஜினிகாந்த் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்துள்ளார். அதேபோன்று பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சனுக்கும் இதுவொரு நல்ல கம்பேக்காக அமைந்துள்ளது.

அதுமட்டும் இன்றி 72 வயதில் ரஜினியிடம் இருந்து இப்படி ஒரு அசாத்தியமான நடிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்தப் படத்தின் வசூலானது பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களும் இந்த படம் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வேளையில் ஜெயிலர் படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் தற்போது பிரபல தனியாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்கும் காட்சி குறித்தும் பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : ரஜினிகாந்த் சாரிடம் நான் சுருட்டு பிடிக்கும் காட்சி பற்றி கூறினேன். அவரும் அதற்கான முக்கியத்துவம் இருந்தால் அதனை செய்யலாம் என்று நினைத்தார். அதனாலேயே அந்த சீன் இடம் பெற்றது.

தோடு அந்த காட்சியை நாங்கள் வைக்கும் போது வழக்கமாகவே ரஜினி வேகமாக சிகரெட்டை தூக்கி போட்டு பிடிப்பார். ஆனால் அதனை வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்பதாலேயே பொறுமையாக சென்று அவரது வாயால் பிடிப்பது போன்று காட்சி அமைத்தோம். தியேட்டரில் பின்னணி இசையோடு சேர்ந்து அந்த சீனை பார்ப்பது உண்மையிலேயே எனக்கு மிக அற்புதமாக இருந்ததாக உணர்ந்தேன். மேலும் அந்த சீன் வரும் போது அந்த காட்சியுடன் ரஜினி சாரின் மாஸை பார்த்து நான் எழுந்து நின்று ரசித்தேன் என்று நெல்சன் கூறியுள்ளார்.

சற்று முன்