- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் உருவாக இயக்குனர் நெல்சன் போட்ட திடீர் கண்டிசன், அதிர்ந்து போன சன்...

ஜெயிலர் 2 படம் உருவாக இயக்குனர் நெல்சன் போட்ட திடீர் கண்டிசன், அதிர்ந்து போன சன் பிக்சர்ஸ் நிறுவனம் – இந்தியன் 2 பாதிப்பாக இருக்குமோ?

- Advertisement -

கடந்தாண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களுக்கு பிறகு நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு, இந்த படம் பெரிய கம்பேக் கொடுத்தது. இன்னொரு பாட்ஷா என்றும் சொல்லும் அளவுக்கு படம் பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்தது.

ஆனால் படத்தின் கதை, சமூக விரோத செயலில் சிலை கடத்தலில் ஈடுபடும் தனது ஒரே மகனை போலீஸ் அதிகாரியான ரஜினி, இறுதியில் சுட்டுக்கொல்வதுதான். இது ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு முன்வந்த தங்கப்பதக்கம் கதைதான் என சொல்லப்பட்டாலும் அனிருத் இசை, தமன்னா நடனம், விநாயகம் வில்லன் நடிப்பு என படத்தை வேற லெவலில் கொண்டு சென்றது.

- Advertisement -

வழக்கமான ரஜினி இதுவரை தனது எந்த ஒரு படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஆனால் ஜெயிலர் படத்துக்கு கிடைத்த அபார வெற்றிக்கு பிறகு இந்த படத்தை 2ம் பாகமாக உருவாக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் விரும்பினார். நெல்சன், ரஜினி, அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசளித்த அவரது வேண்டுகோளை ஏற்று, ரஜினியும் முதல் தடவையாக ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதித்தார்.

இப்போது கூலி படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இந்த 2ம் பாகம் படத்தில் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். தமன்னா, விநாயகம் மட்டுமே நடிக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

இந்நிலையில் ஜெயிலர் 2ம் பாகம் உருவாக 13 மாதங்கள் டைம் கேட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இயக்குனர் நெல்சன் கண்டிசன் போட்டிருக்கிறார். ஒரு ஆண்டு ஒரு மாதம் வரை ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால் 2025ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் என திட்டமிட்டிருந்த ஜெயிலர் 2 படம், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது.

கமல் நடித்த இந்தியன் 2 படுதோல்வி அடைந்ததால், ஜெயிலர் 2 படம் குறித்து ஒரு நம்பகத்தன்மை இல்லாமல் ரஜினி இருக்கிறார். பான் இந்தியா படமாக இதை புஷ்பா, பாகுபலி போல பெரிய வெற்றிப் படமாகவும் தர நெல்சன் திட்டமிட்டுள்ளதால், இப்படி 13 மாதங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் ஆடிப்போன சன் பிக்சர்ஸ் நிறுவனம், விரைவில் ஓகே சொல்லிவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்