தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட தயாராகி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக விஜய், அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்.
விஜய் இதுவரை 68 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக அமைந்தன. குறிப்பாக ஏஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம், அவருக்கு பெரிய அடையாளமாக இருந்தது. இந்த விஜய் படம்தான் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக ஜெகதீஷ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயராம் காஜல் அகர்வால் சத்யன் வித்யுல் ஜம்வால் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்திருந்தனர்.
மிலிட்டரியில் இருந்து விடுமுறைக்காக மும்பை வரும் விஜய், ஸ்லீப்பர் செல் மூலம் அங்கு நடக்கும் வன்முறை, கலவரம் குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டறிந்து அவர்களை கூண்டோடு அழிப்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் பல காட்சிகள் மாஸ் ஆக இருக்கும். அதுவும் தீவிரவாதிகள் கூட்டத்துக்கு தன் தங்கைையே விஜய் அனுப்பி வைக்கும் காட்சி செம திரில்லாக இருக்கும்.
அதனால் இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் ரசிகர்கள் பலரும், துப்பாக்கி 2ம் பாகம் எப்போது வரும் என்று கேட்பது இப்போது வரை வழக்கமாக இருந்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு கூட ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி 2 துவங்கலாம் என்றார். நான்தான் தம்பி விஜய் அழைக்கட்டும் தாராளமாக எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன், என்று பேசியிருக்கிறார்.
ஆனால் விஜய் இப்போது நடித்துவரும் படத்துடன் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் இயக்குனர் இருவருமே துப்பாக்கி 2 படம் எடுக்க ஆவலாக உள்ளனர். பலரது எதிர்பார்ப்பின்படி துப்பாக்கி 2 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. விஜய் அதில் கேமியோ ரோலில் வரும்படி ஏஆர் முருகதாஸ் திட்டமிடலாம்.





