- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் வெடித்தது சர்ச்சை - இதில் யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா விஜயா? அந்த...

மீண்டும் வெடித்தது சர்ச்சை – இதில் யார் சூப்பர் ஸ்டார்? ரஜினியா விஜயா? அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அவர் கருப்பு வெள்ளை படமாக நடித்த பைரவி படம் வெளியானது முதல் அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வசூலில் தொடர்ந்து சக்ரவர்த்தியாக இருக்கும் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கோலிவுட்டில் பலரும் பேச ஆரம்பிக்க அது பெரிய விவகாரமாக மாறியது.

அந்த நேரத்தில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையும் விஜயை மறைமுகமாக விமர்சித்து ரஜினி பேசினார் என்றும் புகைச்சல் கிளம்ப ரஜினி விஜய் ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக மோதிக் கொண்டனர். ஆனால் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய் என்றும் ரஜினி பேசியதால் இந்த விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 29ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகள் என மொத்தம் 264 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அதே மேடையில் அறிவித்தார்.

அப்போது விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சபரிநாதன் என்பவரை விஜய் அறிவித்தார். இவர் நடிகர் விஜயிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக கார் டிரைவராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஊழியர் மகனை வேட்பாளராக மேடையில் விஜய் அறிவித்தது பலத்த கவனத்தை பெற்றது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா நடந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தார். அப்போது ரிஷப்சனில் குடும்ப புகைப்படங்கள் குரூப் குரூப்பாக எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினி வீட்டு பணிப்பெண்ணும் தோளில் பேக் ஒன்றை சுமந்தபடி அவர்களுடன் நின்றிருந்தார்.

அதை கவனித்த நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்ப புகைப்படத்தில் தனது வீட்டு வேலைக்கார பெண் நிற்பதை விரும்பாமல், அவரை அங்கிருந்து தள்ளிப் போ நகர்ந்துவிடு என்று சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது. இப்போது அதை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ள நெட்டிசன்கள், தனது கார் டிரைவர் மகனுக்கு எம்எல்ஏ சீட் தந்த விஜய் சூப்பர் ஸ்டாரா, புகைப்படத்தில் தங்களுடன் நிற்க கூட வேலைக்கார பெண்ணை அனுமதிக்காத ரஜினி சூப்பர் ஸ்டாரா என்று கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்