சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நடுவராக மேடையில் நடிகை சினேகா அமர்ந்திருந்தார். அப்போது நடிகர் சசிக்குமார் கூறியதாவது, நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்க விளையாட்டா நினைப்பீங்க. நான் கரெக்டா சொன்னேன்னா என் பக்கத்துல நீங்க வந்துடணும்.
என்னை ஒரு ரசிகனாக நம்பி நீங்க இங்க வந்திடணும். நான் ஒரு 3 விஷயங்களை கரெக்டா சொல்லிட்டா நீங்க இங்க வரணும். உங்களை 3 தடவை இதுவரைக்கும் நேரில் பார்த்திருக்கேன். முதல் தடவை உங்களை பார்த்தப்போ நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தேன். அந்த படம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படம்.
அந்த படத்தோட ஆடியோ ரிலீஸ் நடந்தது. உங்களை பார்க்க வந்தேன். உங்களை பார்க்க ஓரமா பின்னாடி நின்னேன். அன்னிக்கு நீங்க வொயிட் கலர் காஸ்ட்யூம்ல இருந்தீங்க. அதை நான் பார்த்து ரசிச்சேன். ஏன்னா உண்மையான ரசிகன் நான்.
அதுக்கு அப்புறம் ஒரு அவார்டு நிகழ்ச்சியில் உங்களை பார்த்தேன். அப்போ ஒரு கால் வந்து என்னை மிதிச்சுது. ஆன்னு கத்திட்டு முறைச்சுப் பார்த்தேன். அப்போ நீங்கதான் என்னை மிதிச்சுட்டு போனீங்க. சுப்ரமணியபுரம் படத்துக்கு விருது வாங்க வந்திருந்தேன். அதை தான் நான் என்னோட வெற்றிவேல் படத்துல கதாநாயகி அறிமுக காட்சியா வெச்சேன்.
அந்த இன்ஸ்பிரேசன்ல தான் அந்த சீனை படத்துல வெச்சேன். அப்புறம் ஒய்ஜி மகேந்திரா நாடகம் ஒன்றுக்கு நாம ரெண்டு பேரும் சீஃப் கெஸ்ட்டா வந்தோம். அப்போ ஒரு க்ரீன் அண்ட் க்ரீன் கலர் டிரஸ்ல நீங்க வந்தீங்க என்று இயக்குனர் சசிக்குமார் சொல்ல, மேடையில் அமர்ந்திருந்த நடிகை சினேகா எழுந்து ஓடிவந்து சசிக்குமாரின் அருகில் நின்றுக்கொண்டார்.
அப்போது நான் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது உங்களுடன் ஒரு ரசிகனாக நிற்பதை நான் பெருமையாக நினைத்தேன் என்று இயக்குனர் சசிக்குமார் நடிகை சினேகாவிடம் மகிழ்ச்சியாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் மற்ற 2 நடுவர்களாக நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





