இந்திய சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக தளபதி விஜய் விளங்குகிறார். அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளியான விஜயின் லியோ திரைப்படம் ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 600 கோடியை தாண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார் விஜய். டைம் டிராவல் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதன் சூட்டிங் டெல்லி சென்னை தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது துருக்கியில் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் ஆன ஜேசன் சஞ்சய் படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. சஞ்சய் ஏற்கனவே கனடாவில் உள்ள கல்லூரியில் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவது தொடர்பான படிப்பை மேற்கொண்டு வந்தார். அதற்கு முன்பாக விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நான் அடிச்சா பாடலுக்கு வந்து ஆடி விட்டு செல்வார்.
அப்போதே தனது மகனை விஜய் அடுத்த நடிகனாக்க திட்டமிட்டு இருப்பதாக பலரும் பேசினார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத நேரத்தில், ஜேசன் சஞ்சய் இயக்குனர் ஆவதாக அறிவிப்பு வெளியானது. அவர் கூறிய கதையை லைக்கா நிறுவனத்திற்கு மிகவும் பிடித்து போனதாகவும், இதனால் அந்த நிறுவனம் சஞ்சயை இயக்குனராக ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் கவின் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும், தளபதி விஜயின் மகன் இதை எப்படி இயக்கப் போகிறார் என்ற ஆவல்தான் மேலோங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் தான் அங்கிருந்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சஞ்சய்க்கு ஸ்கிரிப்ட் எழுதும் யுக்தி தெரிந்தாலும், அதை திரைக்கதையாக மாற்றுவதற்கு போதிய அனுபவம் பத்தவில்லையாம்.
மேலும் ஆங்கிலத்திலேயே அவர் ஸ்கிரிப்ட் எடுத்துவிட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யத் தடுமாறுகிறாராம். இதனால் ஸ்கிரிப்ட் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் உதவியுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறதாம். இருப்பினும் லைக்கா நிறுவனம் இதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. விரைவில் ஸ்கிரிப்டுக்கான வேலைகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





