- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்தில் இப்படி ஒரு பிரச்னையா?...

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்தில் இப்படி ஒரு பிரச்னையா? – இலங்கையிலேயே கிடைக்கலையே…

- Advertisement -

அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஸ்ரீ லீலா ரவி மோகன் மற்றும் அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மொழிப்போர் தியாகி இராசேந்திரன் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையாக இந்த படம் உருவாகிறது.

ஏற்கனவே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு நடுவில்தான் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார். அதே போல், இந்தியில் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்ய சென்றுவிட்டார்.

- Advertisement -

இப்போது சிக்கந்தர் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை முடிக்க ஏஆர் முருகதாஸ் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேகன் நடித்துவரும் படத்துக்கு மதராஸி என டைட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 10 தினங்களாக இலங்கையில் பராசக்தி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டிய மீதி காட்சிகளை நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில் மதராஸி படத்துக்காக துறைமுகம் ஒன்றில் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக துறைமுகம் தேடும் பணியில் மதராஸி படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதையறிந்த சிவகார்த்திகேயன், இலங்கையிலும் துறைமுகங்கள் இருப்பதால் இங்கு வந்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அங்கு சென்ற மதராஸி படக்குழுவினர் துறைமுகங்களை நேரில் பார்வையிட்ட போது, அவர்கள் எதிர்பார்த்த வகையில் அந்த துறைமுகங்கள் இல்லாமல் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பகுதிகளில் உள்ள பல துறைமுகங்களை மதராஸி படக்குழுவினர் நேரில் பார்வையிட்ட வகையில் வைஷாக் துறைமுகம், படப்பிடிப்புக்கு ஏற்றதாகவும் அவர்கள் நினைத்தது போன்று எதிர்பார்த்த வகையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய முக்கிய காட்சிகளை வைஷாக் துறைமுகத்தில் எடுக்க இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்