- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்துக்காக அஜீத்குமார் காட்டிய சலுகை… குட் பேட் அக்லி பட நிறுவனத்துக்கு காட்டாத...

ஏகே 64 படத்துக்காக அஜீத்குமார் காட்டிய சலுகை… குட் பேட் அக்லி பட நிறுவனத்துக்கு காட்டாத கருணை – வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட் இதோ…

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக துபாய் ஸ்பெயின் பிரிட்டன் இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் உள்ளார். இவர் பல போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கடந்த ஜனவரி துவங்கிய கார் ரேஸ் இந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வருவதால் அதன் பிறகு அஜீத்குமார் சென்னை திரும்புகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படப்பிடிப்பு வரும் நவம்பரில் துவங்க உள்ளது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையே தனது சம்பளம் ரூ. 186 கோடி என்பதில் இன்னும் நடிகர் அஜீத்குமார் பின்வாங்கவில்லை. அதே நேரத்தில் தயாரிப்பாளர் ராகுலுக்கு ஒரு சலுகையை அவர் வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

அதாவது வழக்கமாக அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனால் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக முதலில் வாங்கிக் கொள்வார். பிறகு மாதந்தோறும் அவரது வங்கி கணக்கில் தயாரிப்பு நிறுவனம் ரூ. 5 கோடி அல்லது ரூ. 10 கோடி என செலுத்திவிட வேண்டும். பிறகு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் மீதி சம்பள பணத்தை மொத்தமாக தந்துவிட வேண்டும். இதுதான் அஜீத்குமாரின் வழக்கம்.

ஆனால் இந்த முறை தயாரிப்பாளர் ராகுல் கேட்டுக்கொண்டதால், முதலில் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக மட்டும் கொடுத்தால் போதும். மாதந்தோறும் வங்கி கணக்கில் எனக்கு பணம் போட வேண்டாம். படம் முடிந்து வியாபாரம் ஆனபிறகு மீதம் உள்ள எனது சம்பளத்தை மொத்தமாக கொடுத்து விடுங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள், வெளிநாட்டில் உள்ள நடிகர் அஜீத்குமாரை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசியிருக்கின்றனர். குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்புக்கான செலவுகள், படத்தின் மூலம் கிடைத்த தியேட்டரிக்கல், நான் தியேட்டரிக்கல் வருமானம் உள்ளிட்ட மொத்த கணக்குகளையும் அவரிடம் காட்டி 70 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருக்கின்றனர்.

அதனால் மீண்டும் ஒரு படம் எங்கள் நிறுவனத்துக்காக நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி நஷ்டத்துக்காக தன்னை வைத்து மீண்டும் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் கடைசியில் தனது சம்பளத்தில் கை வைத்துவிடும் என்பதை புரிந்துக்கொண்ட அஜீத்குமார், பதில் எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் தலையாட்டி அவர்களை திருப்பி அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்