- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி, கைதி 2 படங்களுக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவது அந்த...

கூலி, கைதி 2 படங்களுக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவது அந்த ஹீரோவா? சாரே… கொல மாஸ் சாரே… – துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக முன்னிலையில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி, விஜய் நடித்த மாஸ்டர், கமல் நடிப்பில் விக்ரம், மீண்டும் விஜய் நடிப்பில் லியோ என தொடர்ந்து 5 வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதிலும் விஜய் நடித்த லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதல் பாதி வரை படம் பெரிய அளவில் ரசிக்கப்பட்ட நிலையில், 2ம் பாதியில் ரெட்டை பிறவி, ஜாதகம், நரபலி போன்ற விஷயங்களை கொண்டு வந்ததால், விஜய் ரசிகர்களே பலத்த விரக்தியடைந்து விட்டனர்.

- Advertisement -

இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படத்தில் சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கூலி படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபாஸ் நடிக்க உள்ள பான் இந்தியா படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கு உள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து பிரபாஸ் நடிக்கும் 3 படங்களை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் 2 படம் வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஒரு படம், ஹனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ஒரு படம் என நடிகர் பிரபாஸ் 3 படங்களில் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பிரபாஸை நேரில் சந்தித்து கதை சொல்லி விட்டதாகவும், அந்த கதையை கேட்டு பிரபாஸ் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் நடிகராக இருக்கிறார். இப்போது அவரது படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இமேஜ் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்