- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா பயோபிக் படம் என்னதான் ஆச்சு? பிரபல இயக்குனர் சொன்ன முக்கிய தகவல் - இசைஞானி...

இளையராஜா பயோபிக் படம் என்னதான் ஆச்சு? பிரபல இயக்குனர் சொன்ன முக்கிய தகவல் – இசைஞானி தரப்பில் இருந்து எந்த அப்டேட்டுமே இல்லையே…?

- Advertisement -

கடந்த 50 ஆண்டு கால சினிமா சரித்திரத்தில் இசைஞானி இளையராஜா பெயரை உச்சரிக்காமல் யாரும் நகர்ந்து போய்விட முடியாது. ஏனெனில் பல ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ஆயிரக்கணக்கான படங்களை வெற்றிப் படமாக்கியவர் அவர்தான். இசையில் ஒரு சக்ரவர்த்தியாக தனி ராஜாங்கமே நடத்திக்காட்டியவர் இசைஞானி.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து உலகளவில் சாதனை செய்தார் இசைஞானி. தொடர்ந்து இன்னும் 13 நாடுகளில் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரது அரை நூற்றாண்டு கால இசை பயணத்தை பாராட்டி தமிழக அரசு விரைவில் விழா நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக 2 பாகங்களாக எடுக்க கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டு இதற்கான அறிமுக விழாவும் நடந்தது. இளையராஜாவாக நடிக்கும் நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் இசைஞானி இளையராஜா இந்த விழாவில் பங்கேற்றனர்.

ஆனால் நடிகர் தனுஷ் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன், 2 மாதங்களாக இளையராஜாவுடன் இருந்த நிலையில் ஸ்கிரிப்ட் பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் அந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் ரசிகர்களை அதிருப்தியடைய செய்து வருகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், இளையராஜா பயோபிக் கதையில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது. நான்தான் அந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்கால் தனுஷை வைத்து என்னால் இயக்க முடியாமல் போய்விட்டது என வெளிப்படையாக கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு புதிய தகவலாக இருந்தது.

ஏனெனில் சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் போன்ற ரத்தம் சொட்டும் வன்முறை சண்டை படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன், இசைஞானி இளையராஜா படத்தை இயக்குவதில் பெரும்பாலான ரசிகர்களுக்கு அதிருப்தியே நிலவுகிறது. நேற்று இசைஞானி தனது 50வது ஆண்டு இசை பயணத்தை துவங்கிய நிலையிலும் கூட அவரது பயோபிக் படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால், அந்த படம் டிராப் ஆகி விட்டதா என்ற கேள்வியை சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்