பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடும் வழக்கம் தமிழ் சினிமாவில் இருந்தது. ஜெண்டில்மேன் இந்து வால்டர் வெற்றிவேல் சூரியன் போன்ற படங்களில் நடிகர் பிரபுதேவா இதுபோன்ற சிறப்பு பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி இருப்பார். இந்த பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
அதன்பிறகு இந்த பார்மூலாவை தமிழ் சினிமா மறந்து விட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா சிறப்பு பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் பெரிய அளவில் இந்திய சினிமாவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பல படங்களில் இந்த சிறப்பு பாடல் குத்தாட்டம் மீண்டும் பேஷனாகி விட்டது.
ஜெயிலர் படத்தில் காவலய்யா பாடலுக்கு தமன்னா குத்தாட்டம் போட்டார். அதே போல் கூலி படத்தில் பூஜா ஹெக்டே தி கோட் படத்தில் திரிஷா என இப்போது இது பான் இந்தியா படங்களில் தொடர்ந்து வருகிறது. அதே போல் இப்போது ஜெயிலர் 2 படத்திலும் ஒரு சிறப்பு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி குத்தாட்டம் போட கமிட் ஆகியிருக்கிறார்.
பாலிவுட்டில் உள்ள நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நோரா பதேஹி. கனடாவில் இருந்து 5 ஆயிரம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்த இவர் சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவர். இப்போது 5 நிமிட பாடல் காட்சியில் நடனமாட நோரா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்ச நடிகையாக உயர்ந்திருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல்வேறு அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்த அவர் இன்று நட்சத்திர நாயகியாக பாலிவுட்டில் செல்வாக்குடன் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறார். முதலில் இந்தி படங்களில் நடித்த நோரா பதேஹி அங்கு பிரபலமான பிறகு தென்னிந்திய சினிமாவிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் நோரா மிகவும் பிரபலமானார். டெம்பர் பாகுபலி தோழா போன்ற படங்களில் நோரா பதேஹி நடனம் ஆடியிருக்கிறார். அடுத்து வர உள்ள ஜெயிலர் 2 படத்திலும் தமன்னா போல இவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாடம் ஆட கமிட் ஆகியிருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் இவர் மும்பையில் கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





