- Advertisement -
தமிழ்நாட்டில் இன்று 27ம் தேதி மொத்தம் 13 படங்கள் ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி இருந்தது. சிட்டுக்குறிஞ்சி டெலிவரி பாய் 606 கோ 2 கோ மதுரை மோசடி மின்னும் ஓர் இரவு மௌன மொழிகள் நெல்லை பாய்ஸ் பேய் பிடிச்சிருக்கு நிறம் சிக்னல் அட் 11:30 வட மஞ்சுவிரட்டு ஆகிய 13 பாடங்கள் வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதில் சிட்டுக்குறிஞ்சி டெலிவரி பாய் மின்னும் ஓர் இரவு மௌன மொழிகள் நெல்லை பாய்ஸ் பேய் பிடித்திருக்கு நிறம் சிக்னல் அட் 11:30 ஆகிய 7 படங்கள் மட்டுமே இன்று வெளியாகி இருந்தன. மற்ற 6 படங்கள் வெளியாகவில்லை. மேலும் காலை 6 மணி காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்த இன்று வெளியான எந்த படத்துக்கும் காலை 6 மணி காட்சிகள் நடைபெறவில்லை. எந்த தியேட்டர்களிலும் 6 மணி காட்சி திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





