- Advertisement -
Homeபொழுதுபோக்குகவினின் ஸ்டார் திரைப்படம் கவனிக்க வைத்ததா... ரசிகர்கள் கூறுவது என்ன...

கவினின் ஸ்டார் திரைப்படம் கவனிக்க வைத்ததா… ரசிகர்கள் கூறுவது என்ன…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவினுக்கு, கதாநாயகனாகும் வாய்ப்பைக் கொடுத்தது லிப்ட் திரைப்படம். ஹாரர் திரைப்படமாக உருவான இது, ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு டாடா படம் வெளியானது.

 

கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை இந்த திரைப்படம்தான் கொடுத்தது என்று கூறலாம். தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்தார் கவின். இந்த திரைப்படம் காரணமாக அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

 

இதில் கவின், ஓராண்டு காலம் நடித்து தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஸ்டார். பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இளன்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

ஒரு இளைஞன் எப்படி தனது கதாநாயகன் கனவை அடையத் துடிக்கிறான் என்பதை ட்ரெய்லரில் இயக்குனர் தெளிவாக காட்டி இருந்தார். அதன் காட்சியும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிக நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இதன் காரணமாக படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல் இது தனது தந்தையை வைத்து, தூண்டுகோலாக எழுதப்பட்ட கதை என்று இளன் ஏற்கனவே கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் படம் குறித்த விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நேற்று பத்திரிக்கையாளர் காட்சியில் அந்த படம் பிரமாதமாக இருப்பதாக பலரும் கூறினர். ஆனால் அவ்வாறு கூறப்பட்ட விமர்சனங்களுக்கு ஏற்ப ஸ்டார் இல்லை என்று இன்று வெகுஜன ரசிகர்களிடமிருந்து கருத்து வெளியாகி இருக்கிறது. இருப்பினும், 2k கிட்ஸ்களுக்கு பிடிக்கும் வகையில் பல காட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

குறிப்பாக முதல் பாதி சுமாராக இருப்பதாகவும், கதை தனது தளத்தை அடைவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எமோஷன் காட்சிகள் சில இடங்களில் ஒர்க் அவுட் ஆனாலும், தேவையில்லாத சீன்களும் இடம் பெற்று இருப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் கவினி அற்புதமான நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் இசை இதையெல்லாம் மறக்கடிக்க செய்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, ஸ்டார் திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது.

சற்று முன்