- Advertisement -
Homeபொழுதுபோக்குகைக்காட்டுறவன் எல்லாம் ஓட்டு போடமாட்டான், கிளம்புன்னு சொல்லிடுவான்- விஜய்யை ஓபனாக வம்பிழுத்த பி.வாசு

கைக்காட்டுறவன் எல்லாம் ஓட்டு போடமாட்டான், கிளம்புன்னு சொல்லிடுவான்- விஜய்யை ஓபனாக வம்பிழுத்த பி.வாசு

- Advertisement -

இந்தியாவில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். கலைஞர் கூட சினிமாக்களில் வசனம் எழுதியவர்தான்.

இவர்களை தொடர்ந்து பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என கூறப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு கூட ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதாக கூறினார். ஆனால் அதன் பின் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார்.

அதற்கு பிறகு தற்போது விஜய், விரைவில் கட்சித் தொடங்க உள்ள அறிகுறிகள் தெரிய வருகிறது. சமீப நாட்களாகவே விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுக்கள்தான் எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த பி.வாசு, “தன்னை ஏணியாக இருந்து தூக்கிவிட்ட மக்களை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று நடிகர்கள் யோசிக்கிறார்கள். கமல் அதற்காகத்தான் ஒரு இயக்கத்தை தொடங்கினார்.

ஒரு ஹீரோ கட்சி தொடங்க உள்ளார் என்று சொன்னாலும், அவர் கட்சிக்குத்தான் போவார் என்று நாம் எப்படி முடிவு செய்யமுடியும். கடைசியில் அவர் செய்வது தவறா சரியா என்பதை மக்கள் சொல்லிவிடுவார்கள்.

ஒரு முறை நடிகர் மோகன் பாபுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கட்சித் தொடங்கப்போவதாக கூறினார். அதற்கு நான் ‘கைக்காட்டுறவன் எல்லாம் மை குத்தமாட்டான் சார். நீங்கள் ரோட்டில் போகும்போது எல்லோரும் கைக்காட்டுவார்கள். ஆனால் எலெக்சனில் நின்றால் யாரும் ஓட்டுபோட மாட்டார்கள். கைக்காட்டிவிட்டு அப்படியே கிளம்பு என்று சொல்லிவிடுவார்கள். அரசியலுக்கு வருவதற்கெல்லாம் ஒரு தனி வரம் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால்தான் நடக்கும்’ என கூறினேன்” என்று தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.

சற்று முன்