- Advertisement -
Homeபொழுதுபோக்குஉதவின்னு யாராவது கேட்டு வந்தா….- நடிகர்கள் கவுண்டமணி செந்தில் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட சினிமா...

உதவின்னு யாராவது கேட்டு வந்தா….- நடிகர்கள் கவுண்டமணி செந்தில் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட சினிமா பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் கவுண்டமணி செந்தில். குறிப்பாக 1980 90களில் தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனி ராஜ்ஜியமே இவர்கள் இருவரும் நடத்தினர் என்றால் அது மிகையல்ல. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் என பல ஹீரோக்கள் படங்களின் வெற்றிக்கு இவர்களது காமெடியும் துணை நின்றது.

குறிப்பாக ராமராஜன் நடித்த படங்களில் மாபெரும் வெற்றிக்கு காரணமாக முதலில் இருந்தது இளையராஜாவின் இசையும், அடுத்ததாக கவுண்டமணி செந்தில் இருவரது காமெடி காட்சிகளும்தான். இதற்கு சிறந்த உதாரணமாக கரகாட்டக்காரன் படத்தை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கவுண்டமணி செந்தில் இருவரும் அதிக படங்களில் நடிப்பது இல்லை. தேர்வு செய்து சில படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். ஏனெனில் கவுண்டமணிக்கு 85 வயதாகிறது. நடிகர் செந்திலுக்கும் 70 வயதுக்கு மேலாகி விட்டதால் முதுமையான வயதில் படங்களில் நடிப்பதை தவிர்த்து ஓய்வில் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி 67 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். தகவல் தெரிந்தவுடன் முதல் ஆளாக அங்கு வந்தது நடிகர் செந்தில், அதற்கு பிறகு நடிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் இணை பிரியாத நடிகர்களாக நட்பில் இன்றும் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது, படிப்புக்கு உதவி, கோவிலுக்கு நிதி, திருமண பத்திரிகை வைக்க என அப்படி யார் உதவி கேட்டு வந்தாலும் ஒரு 100 ரூபாய் கூட கொடுக்க மாட்டார். கஞ்சத்தனத்தின் மறுபக்கம் கவுண்டமணி என்றே சொல்லலாம். எனக்கு தெரிந்து அவர் உதவியதாக யாருமே என்னிடம் சொன்னது இல்லை.

ஆனால் அவருடன் பல படங்களில் நடித்த நடிகர் செந்தில் எத்தனையோ பேரை படிக்க வைத்திருக்கிறார். யார் உதவி கேட்டாலும் பணம் கொடுப்பார். இளகிய மனம் படைத்தவர் செந்தில். திருமணத்துக்கு எங்காவது சென்றால் தன் மனைவியுடன் செல்வார் செந்தில். ஆனால் கவுண்டமணி கஞ்சனா, கருமியாக தான் இருந்து வருகிறார் என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்