- Advertisement -
Homeபொழுதுபோக்குஏன் இப்படி பண்றீங்க? ரொம்பவும் கஷ்டப்படுத்தாதீங்க - பிரேமலதா விஜயகாந்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் கேள்வி

ஏன் இப்படி பண்றீங்க? ரொம்பவும் கஷ்டப்படுத்தாதீங்க – பிரேமலதா விஜயகாந்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் கேள்வி

- Advertisement -

இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். பசங்க, மெரினா, நம்ம வீட்டு பிள்ளை, கோலிசோடா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நல்ல கருத்துள்ள படங்களை தான் இயக்கி வருகிறார்.

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டார். சில வாரங்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், அவர் உடல் நலமடைந்ததால் இரு தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். அவரை தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அவருடன் நடித்த நடிகர், நடிகையர், அவரது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் சென்று பார்த்து, நலம் விசாரித்து வருகின்றனர்.

நேற்று தேமுதிக கட்சியின் 21வது ஆண்டு கொடி நாள் விழா மற்றும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் சென்னையில் நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மைத்துனர் சுதீஷ் உட்பட முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

விஜயகாந்த் என்றாலே கம்பீரம் என்று சொல்லும் அளவுக்கு இருந்த அவர் இப்போது கை கால்களை அசைக்க முடியாமல், சேரில் அமர்ந்திருக்கும் போது சரிந்து விழுந்து விடும் நிலையில் பேச முடியாமல் மிக பரிதாபமான நிலையில் காணப்பட்டார். அருகில் நின்று அவரை பாதுகாப்பாக இருவர் பிடித்துக்கொள்ளும்படி பலவீனமாக அவர் இருந்தார். இதைப்பார்த்து தேமுதிகவினர் கதறி கதறி அழுதனர்.

இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் பாண்டிராஜ், இப்போது விஜயகாந்த் அவர்களுக்கு சரியான, முழுமையான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். ப்ளீஸ். மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்ப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என, பிரேமலதா விஜயகாந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது பலரது கருத்தாக இருப்பதால், இந்த பதிவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்