- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு வசனம், 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு யோசித்த இயக்குனர் கே பாக்யராஜ் -...

அந்த ஒரு வசனம், 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு யோசித்த இயக்குனர் கே பாக்யராஜ் – கடைசியில் பார்த்திபன் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி கலையம்சம் கொண்ட படைப்பாக மாற்றிய பெருமை சில இயக்குனர்களுக்கு மட்டுமே உண்டு. அதில் பாரதிராஜா கே பாக்யராஜ் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள்தான் மனித வாழ்க்கையின் யதார்த்தங்களை உண்மைகளை திரையில் கொண்டு வந்தவர்கள்.

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய படங்களில் காமெடி கலந்த திரைக்கதை இருந்தாலும் அதில் சமூகம் சிந்திக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு கருத்தும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கான்செப்ட் எடுத்து அதை சுற்றி வலை பின்னி திரைக்கதையை கொண்டு செல்வதில் வித்தகர் கே பாக்யராஜ்.

- Advertisement -

அந்த வரிசையில் கே பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படத்தில் மிக அழகான பெண் மனைவியாக அவர் எதிர்பார்ப்பார். அப்போது உடல் பருமனான பெண் கல்பனா அவருக்கு மனைவியாக வருவார். மனம் கவர்ந்த பெண்ணாக மனைவி இல்லாததால் அழகான பெண்ணை அவர் தேடிச் சென்று கடைசியில் மனம் திருந்துவதுதான் இந்த படத்தின் மையக்கதை.

பல படங்களில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். தாவணிக்கனவுகள் படத்தில் தனது சிஷ்யன் பார்த்திபனை நடிகர் திலகம் சிவாஜியுடன் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் கே பாக்யராஜ். பிறகு தமிழ் சினிமாவில் பார்த்திபனும் டைரக்டர் நடிகர் தயாரிப்பாளர் என ஜெயித்து காட்டினார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, சின்னவீடு படத்தில் உடல் பருமனான மனைவி தன் கணவனிடம் பேசும் ஒரு டயலாக் திருப்தியாக அமையாததால் 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்திருந்தார் பாக்யராஜ். அப்போது உதவி இயக்குனராக இருந்த நான் சொன்ன ஒரு டயலாக் அவருக்கு பிடித்து போக உடனே அதை படமாக்கி விட்டார்.

அந்த வசனம் என்ன என்றால், மாமா நீங்க தோள்ல போடுற துண்டு மாதிரி ஒரு அழகான பொண்டாட்டியா நான் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலில் மாட்டுகிற செருப்பு மாதிரி உபயோகமான ஒரு வேலைக்காரியா கூடவா நான் இருக்க மாட்டேன்? என்று பார்த்திபன் எழுதிய அந்த வசனத்தை தான் படத்தில் கல்பனா தன்னிடம் பேசும் வசனமாக பாக்யராஜ் பயன்படுத்தி இருந்தார் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்